
வானூர்தி மேம்பாட்டு முகமை HALE ரக ட்ரோன்களை உருவாக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது, ஏற்கனவே நடைபெற்று வரும் தபாஸ் ட்ரோனுடைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.
இந்த HALE ரக ட்ரோன்கள் தற்போது இந்தியாவிடம் இருக்கும் ட்ரோன்களை விடவும் அதிக உயரத்தில் அதிக தொலைவுக்கு அதிக எடையுடன் பறக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தற்போது கடக் மற்றும் ஃபுஃபா என இரண்டு வெவ்வேறு ஆளில்லா போர் விமானங்களின் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.