பிரம்மாஸ் ஏவுகணையின் நவீன வடிவம் வெற்றிகரமாக சோதனை !!

  • Tamil Defense
  • March 7, 2022
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணையின் நவீன வடிவம் வெற்றிகரமாக சோதனை !!

இந்திய கடற்படை தனது நாசகாரி போர் கப்பல் ஒன்றில் இருந்து தொலைதூர தாக்குதல் திறன் கொண்ட பிரம்மாஸை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தொலைதூர தாக்குதல் திறன் கொண்ட பிரம்மாஸ் ஏவுகணையின் அதிநவீன வடிவம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சோதனையின் போது இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் கூறிய நிலையில் தாக்குதல் வரம்பை மட்டும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது.

இந்த வருடம் மட்டும் இதுவரை மூன்று முறை பிரம்மாஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.