800 கிலோமீட்டர் செல்லும் புதிய பிரம்மாஸ் ஏவுகணை பணிகள் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • March 15, 2022
  • Comments Off on 800 கிலோமீட்டர் செல்லும் புதிய பிரம்மாஸ் ஏவுகணை பணிகள் ஆரம்பம் !!

போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் சிறிய பிரம்மாஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் சேவையில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.

சுகோய்30 போர் விமானங்கள் சுமந்து செல்லும் வகையிலான இந்த பிரம்மாஸ் ஏவுகணைகள் வெறுமனே 300 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை மட்டுமே கொண்டிருந்த நிலையில் அதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்த புதிய பிரம்மாஸ் ஏவுகணை தாக்கி அழிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த கனரக பிரம்மாஸ் ஏவுகணைகளை சுகோய்30 விமானங்கள் மட்டுமே சுமக்கும் நிலை நிலவி வருகிறது இப்படி 40 சுகோய் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன.

ஆனால் வருங்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள இலகுரக அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகளை தேஜாஸ் போன்ற இலகுரக விமானங்களாலும் சுமக்க முடியும் அதே நேரத்தில் இவற்றின் தாக்குதல் வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.