உக்ரைனில் சண்டையிட விண்ணப்பித்துள்ள 500க்கும் அதிகமான இந்தியர்கள் !!

ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் சண்டையிட சுமார் 500க்கும் அதிகமான இந்தியர்கள் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில் இரண்டு முன்னாள் கடற்படை வீரர்களும் விண்ணப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் விண்ணித்தோரின் விண்ணப்பங்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படாது மாறாக அந்தந்த நாட்டு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என உக்ரைனிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமித்ரி குலேபா வெளியிட்டுள்ள தகவல்களின்படி இதுவரை 52 நாடுகளை சேர்ந்த 30,000 பேர் சண்டையிட விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.