Breaking News

Day: March 31, 2022

18 அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் வாங்க முடிவு !!

March 31, 2022

இந்திய தரைப்படை 18 அனைத்து நிலப்பரப்பு வாகனங்களை ஃபின்லாந்து நாட்டிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இவற்றில் 12 வாகனங்கள் லே பிராந்தியத்திலும், 6 வாகனங்கள் குஜராத்தின் கட்ச் பகுதியிலும் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. சிறிய ரக ஆயுதங்களின் தாக்குதலை தாங்கும் திறன் கொண்ட இந்த வாகனங்கள் 10 தரைப்படை வீரர்களை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய எல்லை பாதுகாப்பு படை இத்தகைய அனைத்து நிலப்பரப்பு வாகனங்களை எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்தி […]

Read More

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன JDAM குண்டுகளை வாங்க ஆர்டர் !!

March 31, 2022

இந்திய விமானப்படை தனது தேஜாஸ் போர் விமானங்களின் திறன்களை அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன JDAM ரக குண்டுகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. JOINT DIRECT ATTACK MUNITION எனப்படும் இந்த அதிநவீன குண்டுகள் 80 கிலோமீட்டர் தொலைவு வரையில் சென்று இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஏற்கனவே இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள குறிப்பாக பாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன SPICE குண்டுகளை போன்றவையாகும். தற்போது இந்திய […]

Read More

ரஷ்ய படைகளிடம் இருந்து இர்பின் நகரம் விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு !!

March 31, 2022

உக்ரைனுடைய வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான இர்பின் ரஷ்ய படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்நகரத்தின் மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் உக்ரைனிய தரைப்படை மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்ட ஜார்ஜியன் லிஜியன் ஆகிய படையணிகள் பங்கு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இர்பின் நகரத்தை தவிர மோட்ஸைன், லிஸ்னே, காபிடாநிவ்கா மற்றும் டிமித்ரிவ்கா ஆகிய நகரங்களும் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து உக்ரைனிய படைகள் ஹோஸ்டோமெல் மற்றும் […]

Read More

இந்தியா வரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் !!

March 31, 2022

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் விரைவில் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ளார். மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்தியா வரும் அவர் ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான இரண்டு நாட்களில் பல்வேறு முக்கிய தலைவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து இந்தியா ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

இரண்டாம் கட்டத்தை எட்டிய இந்தியாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டம் !!

March 31, 2022

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அக்னி-1 ஏவுகணையின் பூஸ்டர்களை பயன்படுத்தி ஹைப்பர்சானிக் ஏவுகணையை ஏவி டெமோ செய்து காண்பித்தது. தற்போது அக்னி-1 ஏவுகணையின் இரண்டு நிலை பூஸ்டர்களை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக கே-4 ஏவுகணையின் பூஸ்டர்களை இணைப்பதன் மூலமாக 4 முதல் 5 மடங்கு வரை இயக்க வரம்பை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த கே-4 ரக ஏவுகணையின் பூஸ்டர்களை ASAT எனப்படும் செயற்கைகோள் நாசகாரி ஏவுகணையில் […]

Read More

ரஷ்ய வீரர்கள் சித்திரவதை விசாரணை நடைபெறுவதாக உக்ரைன் அறிவிப்பு !!

March 31, 2022

சமீபத்தில் கைதான அல்லது சரணடைந்த ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் தரைப்படை வீரர்கள் கால் மூட்டுகளில் ஏகே47 ரக துப்பாக்கிகள் கொண்டு சுடும் காணொளி வெளியானது. இதனையடுத்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் இந்த காணொளி பற்றிய விசாரணை துவங்கி நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் அவர் நாங்கள் ஒரு ஐரோப்பிய நாட்டு ராணுவம் நாங்கள் போர் கைதிகளை சித்திரவதை செய்வதில்லை இது உண்மையானால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வாகும் என கூறியுள்ளார். இது தவிர அவர் […]

Read More

இந்தியா வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

March 31, 2022

அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார் இவர் விரைவில் இந்தியா வர உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் எலிசபெத் ட்ரஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் இந்தியா வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தலீப் சிங் தான் உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகளுக்கு முக்கிய காரணகர்த்தா என தகவல்கள் […]

Read More

உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட செல்ல வேண்டாம் என அறிவிக்கை வெளியிட்ட ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகள் !!

March 31, 2022

ஜெர்மனி ஃபிரான்ஸ் இத்தாலி பெல்ஜியம் லக்சம்பர்க் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகள் தங்களது நாட்டு குடிமக்களுக்கு முக்கிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதாவது தங்கள் நாட்டு குடிமக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக ஒரு ஐரோப்பிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சரான ஜெரால்டு ஆர்மீனின் நிச்சயமாக எங்கள் குடிமக்கள் போர் களத்திற்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என அதே நாளேட்டிற்கு பேட்டி அளிக்கும் […]

Read More

இந்திய நாட்டின் சேவையில் 60 ஆண்டுகளை தொடும் சேட்டக் !!

March 31, 2022

சேத்தக் ஹெலிகாப்டர்கள் இந்திய நாட்டின் சேவையில் சுமார் 60 ஆண்டுகளை அடுத்த மாதம் தொட உள்ளன. இதற்கான விழாவை செகந்திராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை விமரிசையாக ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் கொண்டாட உள்ளது. கடந்த 1962ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ஆலூட்-3 எனும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன, இதனை பின்னர் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சேட்டக் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இந்த சேட்டக் ஹெலிகாப்டர்கள் இரண்டு […]

Read More

60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி !!

March 31, 2022

1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியின் 60ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 2 கொண்டாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலம் விமானப்படை தளத்தில் உருவாக்கப்பட்டது பின்னர் 1973ஆம் ஆண்டு ஹகிம்பேட் விமானதளத்திற்கு மாற்றப்பட்டது, இடைப்பட்ட காலகட்டத்தில் அலகாபாத் மற்றும் ஜோத்பூர் தளங்களுக்கும் மாற்றப்பட்டு உள்ளது. இந்த பிரத்யேக விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி ஆகியோர் ஹகிம்பேட் தளத்தில் நடைபெறும் […]

Read More