Breaking News

Day: March 28, 2022

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய ட்ரோன்களை அழித்த சவுதி அரேபியா !!

March 28, 2022

சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் வெடிபொருட்களுடன் வந்த 9 ட்ரோன்களை சவுதி அரேபிய ராணுவம் அழித்துள்ளது. விடியற்காலை நேரத்தில் சவுதி அரேபியாவின் கிழக்கு தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து இந்த ட்ரோன்களை அனுப்பி உள்ளனர். ஆனால் இந்த ட்ரோன்களை சவுதி அரேபிய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டு வானிலேயே தாக்கி அழித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

உக்ரைன் போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட அதிபர் பைடனின் டைகர் டீம் !!

March 28, 2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியதையடுத்து ஒரு சிறப்பு நிபணர் குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவை பரவலாக டைகர் டீம் என அழைக்கின்றனர் இந்த குழு ரஷ்யா தொடர்பான மிக முக்கியமான புவிசார் அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகளுக்கான திட்டங்களை வகுக்கும். இந்த குழு உக்ரைனில் ரஷ்யா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் எப்படி அமெரிக்கா மற்றும் நேட்டோ பதிலடி கொடுப்பது, அகதிகள் பிரச்சினையை எப்படி கையாள்வது, உக்ரைன் தவிர ரஷ்யாவுடன் எல்லையை […]

Read More

சவுதி அரேபியா மீது ஹூத்தி பயங்கரவாதிகள் நடத்திய கொடுர தாக்குதல் !!

March 28, 2022

சவுதி அரேபியா மீது ஈரானுடைய ஆதரவு பெற்ற ஏமன் நாட்டின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மிகவும் பயங்கர ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளனர். சவதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ஃபார்மூலா-1 கார் பந்தய களத்தின் மீது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளனர். இது தவிர ஜெட்டா நகரில் உள்ள சவுதி அரேபிய பெட்ரோலிய நிறுவனமான அராம்கோவின் நிலையங்களை கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. இப்படி சவுதி அரேபியாவின் 16 வெவ்வேறு பகுதிகளை இலக்குகளாக மாற்றி ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு […]

Read More

மீண்டும் அஸர்பெய்ஜான் அர்மீனியா இடையே போர் வெடிக்கும் அபாயம் பாக் பயங்கரவாதிகள் தயார் !!

March 28, 2022

அடுத்த மாதம் வாக்கில் அஸர்பெய்ஜான் அர்மீனியா மீது படையெடுக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஸர்பெய்ஜான் ஆக்கிரமித்துள்ள நகார்னோ கராபக் பகுதியில் பெருமளவில் படைகளை குவித்துள்ளதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அஸர்பெய்ஜான் படைகளுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளும் களம் இறங்கலாம் என கூறப்படுகிறது.

Read More

உக்ரைனில் ரஷ்ய ராணுவ அதிகாரியை கொன்ற ரஷ்ய வீரர்கள் !!

March 28, 2022

ஒரு ரஷ்ய தரைப்படை ப்ரிகேடியர் அந்திஸ்திலான அதிகாரியை அவரது வீரர்களே உக்ரைனில் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்னல் மெட்வெசெக் 37ஆவது மோட்டார் ரைஃபிள் ப்ரிகேடின் கட்டளை அதிகாரி ஆவார், போரில் அதிகளவில் இழப்பு ஏற்பட்டதால் அவரது வீரர்களே அவரை கொன்றுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

துருக்கியில் இருந்து ட்ரோன்களுடன் திரும்பிய உக்ரைனிய விமானம் !!

March 28, 2022

உக்ரைன் நாட்டை சேர்ந்த விமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான ஆண்டனோவ் ஸ்டேட் என்டர்ப்ரைஸ் தற்போது போருக்கான உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான AN-124 ரக சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்று துருக்கியில் இருந்து பைராத்கர் ட்ரோன்களுடன் ஐரோப்பா திரும்பி உள்ளது. அதாவது நேரடியாக உக்ரைனில் தரையிறங்க முடியாத காரணத்தால் போலந்து நாட்டில் உள்ள ஷெஷோவ் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. ஹங்கேரி நாட்டு அரசு இந்த விமானம் தனது வான் வெளிக்குள் நுழைய […]

Read More

பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவிய ஈரான் !!

March 28, 2022

ஈரான் நாட்டில் இருந்து பாகிஸ்தானுடைய பான்ஜ்குர் பகுதி மீது ஈரான் நாட்டு ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமான பராமரிப்பு பணிகளின் போது தவறுதலாக ஏவப்பட்ட இந்த ஏவுகணையால பாகிஸ்தான் தரப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிரம்மாஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒன்றும் இதை போல பாகிஸ்தானுக்குள் தவறாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

மீண்டும் காஷ்மீரில் 370ஆவது சிறப்பு அதிகார சட்டம் வந்தால் இந்தியாவுடன் பேச தயார் இம்ரான் கான் !!

March 28, 2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370ஆவது சிறப்பு அந்தஸ்து சட்டம் அமல்படுத்த பட்டால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியுள்ளார். பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்புறவை பேண விரும்புகிறது ஆனால் அது இந்தியா 370ஆவது சிறப்பு அந்தஸ்து சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவில் காஷ்மீர் விவகாரம் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மையக்கரு எனவும் அவர் கூறியுள்ளார்.

Read More

சுதேசி DRDO கார்னர்ஷாட் துப்பாக்கி படையில் இணைக்க தயார் !!

March 28, 2022

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ள கார்னர்ஷாட் ரக துப்பாக்கி படையில் இணைக்க தயார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான ARDE இந்த ஆயுதத்தை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்த ஆயுதத்தின் தொழில்நுட்பத்தை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் BEL மற்றும் ஸென் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களுக்கு தயாரிப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த ஆயுதத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் […]

Read More

இந்தியாவுக்கு மருந்து பொருட்கள் இறக்குமதிக்கான பணத்தை தராத பாகிஸ்தான் !!

March 28, 2022

இந்தியாவுக்கு பாகிஸ்தான் சுமார் 4,30,000 அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை தராமல் கால தாழ்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்தியாவிடம் இருந்து மருந்து பொருட்களை இறக்குமதி செய்ததற்கான தொகையை பாகிஸ்தான் தரவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பலத்த கடன்சுமையால் பாதிக்கப்பட்டு அந்நாட்டு பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More