Breaking News

Day: March 26, 2022

அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கி அழிக்கும் புதிய வடகொரிய அணு ஆயுத ஏவுகணை !!

March 26, 2022

நேற்று முன்தினம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் வடகொரிய ராணுவம் ஒரு புத்தம் புதிய அணு ஆயுத ஏவுகணையை அறிமுகம் செய்தது. இத்தோடு நின்று விடாமல் ஹ்வாசாங்-17 என்ற இந்த ஏவுகணை விண்ணில் 6000 கிலோமீட்டர் பயணித்து சர்வதேச கடல்பகுதிக்குள் விழுந்தது, இது ஹ்வாசாங்-15,16 ஆகிய ஏவுகணைகளின் வரிசையில் வந்த புதிய ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்கி அழிக்க முடியும் என வடகொரிய அரசு மற்றும் பாதுகாப்பு துறை […]

Read More

வசீரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் !!

March 26, 2022

பாகிஸ்தான் நாட்டின் வசீரிஸ்தான் பகுதியில் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளனர் இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த மாதமும் தெஹ்ரீக் இ தாலிபான்கள் அமைப்பு கைபர் பக்தூன்வா பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

இஸ்ரேலின் புதிய ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் ட்ரோன் !!

March 26, 2022

இஸ்ரேல் நாட்டின் STEADY COPTER மற்றும் SMART SHOOTER ஆகிய நிறுவனங்கள் ஒரு புதிய ஆயுதம் தாங்கிய ட்ரோன் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் விரைவில் இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்வில் நடைபெற உள்ள ISDEF-2022 பாதுகாப்பு கண்காட்சியில் இந்த ட்ரோனை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த GOLDEN EAGLE எனும் ட்ரோனானது STEADYCOPTER நிறுவனத்தின் BLACK EAGLE – 50E ட்ரோனில் SHARPSHOOTER நிறுவனத்தின் SMASHDRAGON ஆயுத அமைப்பை இணைத்து உருவாக்கி உள்ளனர். 80-120 கிலோமீட்டர் […]

Read More

இரண்டு டோக்ரா படையணிகளை சிறப்பித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே !!

March 26, 2022

இந்திய தரைப்படையின் டோக்ரா ரெஜிமென்ட்டின் இரண்டு படையணிகளை இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே சிறப்பித்தார். 20ஆவது டோக்ரா மற்றும் 21ஆவது டோக்ரா பட்டாலியன்களுக்கு உத்தர பிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் உள்ள டோக்ரோ ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற விழாவில் கொடிகள் வழங்கப்பட்டன. இந்த இரண்டு படையணிகளும் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் சிறப்பாக நாட்டுக்கு சேவையாற்றிய காரணத்தால் இந்திய தரைப்படை இரண்டு படையணிகளையும் கவுரவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி ராணுவங்களில் பின்பற்றப்படும் பாரம்பரியங்களில் ஒன்றாகும் குடியரசு தலைவர் பிரதமர் […]

Read More

இந்தியா வெற்றிகரமாக சோதித்த தொலைதூர பிரம்மாஸ் ஏவுகணை !!

March 26, 2022

நேற்று முன்தினம் இந்தியா அந்தமான் தீவில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொலைதூர பிரம்மாஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையானது தனது இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் தெரிவித்தனர். சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக பிரம்மாஸ் ஏவுகணை ஏவப்பட்ட பிறகு நடைபெறும் இந்தியாவின் முதல் ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்ட விவகாரம் இந்திய விமானப்படையின் விசாரணை ஆரம்பம் !!

March 26, 2022

இந்திய விமானப்படை சமீபத்தில் தவறுதலாக பிரம்மாஸ் ஏவுகணை ஏவப்பட்ட விவகாரத்தில் விசாரணையை துவங்கி நடத்தி வருகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்த ஏவுகணை ஏவப்பட்ட விவகாரத்தில் “க்ரூப் கேப்டன்” அந்தஸ்திலான விமானப்படை அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இனி விசாரணை தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் தெரிய வரும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

கெமிக்கல் ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டால் நேட்டோ பதிலடி தரும் ஜோ பைடன் எச்சரிக்கை !!

March 26, 2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் ரஷ்யா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ கூட்டமைப்பு பதிலடி தரும் என எச்சரித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் பேசிய அவர் தற்போது நாம் ஒற்றுமையாக இருப்பது மிகவும் முக்கியம் மேலும் இந்த நபர் எவ்வளவு கொடுரமானவர் என்பதை உணர வேண்டும் என ரஷ்ய அதிபரை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பா சென்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து இந்த […]

Read More

தில்லியில் தீவிரமடையும் அஹிர் ரெஜிமென்ட் கோரிக்கை போராட்டம் !!

March 26, 2022

ஹரியானா மாநிலத்தின் தெற்கு பகுதி அஹிர்வால் பிரதேசம் என அழைக்கப்படுகிறது இப்பகுதியை பூர்வீகமாக கொண்ட மக்கள் அஹிர் இனக்குழுவினர் ஆகும். மிகவும் நீண்ட காலமாக இவர்கள் இந்திய தரைப்படையின் ஜாட் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வருகின்றனர் ஆனால் இவர்கள் தங்களுக்கென தனி ரெஜிமென்ட் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தலைநகர் தில்லிக்கு செல்லும் குர்காவன் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடிக்கு அருகே அஹிர் இன மக்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கை புதிதல்ல […]

Read More

உக்ரைனில் கொல்லப்பட்ட 6ஆவது ரஷ்ய ஜெனரல் !!

March 26, 2022

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ஆறாவதாக ஒரு ரஷ்ய தரைப்படையின் ஜெனரல் அந்திஸ்திலான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 49ஆவது கூட்டு தரைப்படை அணியின் கட்டளை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெஸான்ட்ஸேவ் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். கெர்சோன் அருகேயுள்ள சோர்னோபய்வாகா பகுதியில் நடைபெற்ற சண்டையில் உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Read More