Breaking News

Day: March 24, 2022

இந்திய நிறுவனம் உருவாக்கும் உலகின் முதல் ஸ்வார்ம் ட்ரோன் எதிர்ப்பு மைக்ரோ ஏவுகணை !!

March 24, 2022

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான சோலார் இன்டஸ்ட்ரீஸ் ஒரு புதிய மைக்ரோ ஏவுகணை ஒன்றை உருவாக்கி வருகிறது. 2 கிலோ எடை கொண்ட இந்த மைக்ரோ ஏவுகணை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து குழுவாக வரும் SWARM DRONEகளை தாக்கி அழிக்கும் திறனை கொண்டிருக்கும். இது உலகின் முதல் SWARM DRONE எதிர்ப்பு ஏவுகணையாகும், 24/36/48 என மூன்று வெவ்வேறு விதமான எண்ணிக்கையில் இந்த ஏவுகணைகளை ஏவும் லாஞ்சர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய […]

Read More

புதிய வான் பாதுகாப்பு துப்பாக்கிகளின் தயாரிப்புக்கு அனுமதி !!

March 24, 2022

இந்திய அரசின் வர்த்தக துறை அமைச்சகம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரெயின்மெட்டால் நிறுவனம் மற்றும் இந்தியாவின் பெல் பொதுத்துறை நிறுவனம் இடையேயான ஒத்துழைப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து கூட்டு தயாரிப்பு முறையில் ஒர்லிகான் ஸ்கைஷீல்டு எனும் ரீவால்வர் ரக அதிநவீன வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளன. இந்திய தரைப்படைக்கு இத்தகைய சுமார் 220 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளின் தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ராமநாதபுரத்தில் கடற்படையில் இணைந்த இரண்டு புதிய சுதேசி ஹெலிகாப்டர்கள் !!

March 24, 2022

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். பருந்து வானூர்தி படைத்தளம் அமைந்துள்ளது. இந்த படைத்தளத்தில நேற்று காலை நடைபெற்ற விழாவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு த்ரூவ் மார்க்-3 ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் இணைந்தன. இரண்டு ஹெலிகாப்டர்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக இந்திய கடற்படை பதினெழு த்ரூவ் […]

Read More

பாகிஸ்தான் தேசிய விழாவில் காஷ்மீர் பயங்கரவாதிகளின் புகைப்படம் !!

March 24, 2022

பாகிஸ்தான் நாட்டின் தேசிய விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது அந்த விழாவில் பல்வேறு மாகாணங்களின் சிறப்பை விளக்கும் ஊர்திகள் கலந்து கொண்டன. இப்படி அணிவகுத்த பல்வேறு ஊர்திகளின் வரிசையில் ஜம்மு காஷ்மீர் பற்றிய அலங்கார ஊர்தி ஒன்றும் இடம்பெற்று இருந்தது. இந்த அலங்கார ஊர்தியில் காஷ்மீர் பிரிவினைவாதி சயத் அலி ஷா கிலானி மற்றும் கொல்லப்பட்ட ஹிஸ்புல் மூஜாஹீதின் பயங்கரவாதி புர்ஹான் வானி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இது ஒன்றே காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் கொண்டு செய்யும் […]

Read More

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்; அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் போர் தான் மல்லுக்கட்டும் ரஷ்யா நேட்டோ !!

March 24, 2022

ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கொவ் ரஷ்யாவின் இருப்பிற்கு பேராபத்து ஏற்ப்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என கூறி உள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க உளவுத்துறையின் இணை தலைவர் மார்கோ ரூபியோ ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி அதன் காரணமாக கதிர்வீச்சு அல்லது கதிரியக்க துகள்கள் நேட்டோ நாடுகளில் இயற்கை காரணிகளால் பரவினால் நேட்டோ ரஷ்யா மீது போர் தொடுக்கும் என கூறியுள்ளார். இரு தரப்பினரும் இப்படி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது பற்றி […]

Read More

பரபரப்பை ஏற்படுத்திய போலந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்திலிருந்து எழும்பிய கரும்புகை !!

March 24, 2022

போலந்து நாட்டின் தலைநகர் வார்சா நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திலிருந்து கரும்புகை எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டு அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எரிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது இதனால் விரைவில் ரஷ்ய தூதரகம் போலந்து நாட்டில் முடப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்ய அரசும் போலந்து அரசு 45 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் வேவு பார்க்கும் பணிகளில் ஈடுபட்டதாக கூறி வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியா வந்துள்ள உகாண்டா நாட்டு ராணுவ குழு !!

March 24, 2022

உகாண்டா மக்கள் பாதுகாப்பு படையின் குழு ஒன்று இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ளது. இந்த குழுவானது தலைநகர் தில்லியில் உள்ள தரைப்படை தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டது. பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்து பேசினர்.

Read More

இந்திய நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய கொலைகார ட்ரோன் !!

March 24, 2022

சோலார் இன்டஸ்ட்ரீஸ் எனப்படும் இந்திய தனியார் நிறுவனம் ஒன்று LM-0 எனப்படும் கொலைகார ட்ரோனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரோன் 15 கிலோமீட்டர் இயக்க வரம்பை கொண்டது மேலும் இதனால 1.5 கிலோ எடையிலான வெடிமருந்தை இந்த ட்ரோன் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை ட்ரோன்கள் களமுன்னனியில் உள்ள தரைப்படை வீரர்களுக்கு மிகப்பெரிய பலமாகவும் வரப்பிரசாதம் ஆகவும் அமையும் என்றால் மிகையல்ல.

Read More

ரஷ்யா மீது தடை விதிக்க மறுத்த செர்பியா ஒருநாளும் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என அறிவிப்பு !!

March 24, 2022

செர்பியா ரஷ்யா மீது தடைகளை விதிக்காது எனவும் ஒரு நாளும் ரஷ்ய எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்க போவதில்லை என செர்பியா அறிவித்துள்ளது. இதனை செர்பியா நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வூலின் தெரிவித்தார் அப்போது அவர் மேற்குலக நாடுகளின் ரஷ்ய எதிர்ப்பு முயற்சிகளை செர்பியா ஆதரிக்காது எனவும் கூறினார். ரஷ்யாவின் சொத்துக்களையோ ரஷ்ய மக்களின் சொத்துக்களையோ ஒரு நாளும் முடக்கவோ திருடவோ மாட்டோம் எனவும் ரஷ்ய ஊடகங்களை தடை செய்ய மாட்டோம் எனவும் கூறியுள்ளார். செர்பியா உக்ரைன் […]

Read More

தபாஸ் ட்ரோனுக்கு பிறகு தீவிரமடையும் HALE ரக ட்ரோன்களின் பணிகள் !!

March 24, 2022

வானூர்தி மேம்பாட்டு முகமை HALE ரக ட்ரோன்களை உருவாக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது, ஏற்கனவே நடைபெற்று வரும் தபாஸ் ட்ரோனுடைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த HALE ரக ட்ரோன்கள் தற்போது இந்தியாவிடம் இருக்கும் ட்ரோன்களை விடவும் அதிக உயரத்தில் அதிக தொலைவுக்கு அதிக எடையுடன் பறக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர தற்போது கடக் மற்றும் ஃபுஃபா என இரண்டு வெவ்வேறு ஆளில்லா போர் விமானங்களின் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதும் […]

Read More