கனடாவை சேர்ந்த உலகின் மிகச்சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவராக கருதப்படும் வாலி ரஷ்ய சிறப்பு படைகளுடனான சண்டைகளில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வாலி தான் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் தனது இருப்பை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை என தெரிவித்த அவர் இதுவரை சிறந்த முறையில் சண்டையிட்டு வருவதாகவும் களத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Read Moreபாகிஸ்தான் தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை ஜெனரல் பாஜ்வா மட்டுமின்றி அனைத்து மூத்த ராணுவ அதிகாரிகளும் இம்ரான் கானிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யின் இயக்குனர் லெஃப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜூம் ஆகியோர் இம்ரான் கானை சந்தித்த பின்னர் […]
Read Moreபாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று பெஷாவர் நகரில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரண்டு விமானிகளும் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதே நேரத்தில் தரையில் வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானங்கள் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreநாட்டின் தலைநகரான புதுதில்லி அமைந்துள்ள தில்லி மாநிலத்தின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரை கவர்ந்துள்ளது. அதாவது ஜரோடா கலான் பகுதியில் மாணவ மாணவிகளை இந்திய முப்படைகளுக்கு தயார்படுத்தும் பள்ளி ஒன்றை தில்லி அரசு கட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இப்பள்ளியில் பயில கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதிகளும் அமைத்து கொடுக்கப்படும் எனவும் கூறினார். ஒவ்வொரு வருடமும் தலா 100 மாணவ மாணவிகள் ஒன்பது மற்றும் […]
Read Moreரஷ்ய கடற்படையின் கருங்கடல் படைப்பிரிவின் துணை கட்டளை அதிகாரியான கேப்டன் ஆண்ட்ரே பாலி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மரியூபோல் நகரத்திற்கு அருகே நடைபெற்ற பயங்கர சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் சார்பாக பொது மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட பாதையை கண்காணிக்கும் போது அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் இது சர்வதேச அளவில் அனுதாபம் தேடும் தந்திரம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
Read Moreஉகாண்டா அரசாங்கம் தங்கள் நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சுகோய்30 எம்கே ரக போர் விமானங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளை இந்தியாவின் சுகோய் தயாரிப்பாளரான அரசுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உகாண்டா ரஷ்யாவிடம் இருந்து மேற்குறிப்பிட்ட சுகோய்-30 எம்கே ரக போர் விமானங்களில் ஆறு விமானங்களை பத்தாண்டுகளுக்கு முன்னர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Read Moreஅமெரிக்கா சமீபத்தில் 800 மில்லியன் டாலர் அளவிலான மதிப்பு கொண்ட பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் அடங்கிய தொகுப்பை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளது. அந்த தொகுப்பில் FGM-148 JAVELIN, FIM-92 STINGER, AT-4 போன்ற அதிநவீன டாங்கி எதிர்ப்பு மற்றும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் அடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுடன் SWITCHBLADE என்ற 2அடி நீளம் கொண்ட 5 பவுன்ட் எடை கொண்ட தற்கொலை தாக்குதல் நடத்தும் ஆளில்லா வானூர்தியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை வீரர்கள் […]
Read Moreநேற்று மதியம் ராமேஸ்வரத்தில் இருந்து அமைந்துள்ள நான்காவது தீவில் சிக்கியிருந்த 3 குழந்தைகள் உட்பட் 6 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையின் வீரர்கள் ஹோவர்கிராஃப்ட் மூலமாக மீட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக பிழைப்பு தேடி இந்தியா வந்ததாக கூறினார் இதனையடுத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் தமிழக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு மாநில அரசின் அதிகாரிகளிடம் 6 இலங்கை […]
Read Moreஉக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு தொடர்ந்து அழுத்தம் தந்த நிலையில் தற்போது க்வாட் அமைப்பானது உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை ஏற்று கொள்வதாகவும் இதனால் ஒத்துழைப்பில் பாதிப்பு இருக்காது எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. விரைவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் காணொளி வாயிலாக சந்தித்து பேச உள்ளனர் அப்போது உக்ரைன் விவகாரமும் பேசப்படும் என கூறப்படுகிறது.
Read More