Day: March 22, 2022

கடலில் கண்ணிவெடிகள் ;ரஷ்ய குற்றசாட்டை மறுத்த உக்ரைன் !!

March 22, 2022

கருங்கடல் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை உக்ரைன் மிதக்கவிட்ட நிலையில் அந்த சங்கிலியில் இருந்து பல நூறு கண்ணிவெடிகள் பிரிந்து சென்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. மேலும் இந்த பிரிந்து சென்ற கடல்சார் கண்ணிவெடிகளால் கடல்சார் வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவின் உளவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யாவின் குற்றசாட்டுகளை போலி தகவல் என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More

உக்ரைனுக்கு ஆயுதம் அளித்ததால் ஆயுத தட்டுபாடு ஏற்பட்டுள்ளது-கனடா !!

March 22, 2022

ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா ஆதரவு தெரிவித்து வருவதும் ஆயுதங்களை வழங்கியும் வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுதங்களை கனடா வழங்கியதால் தற்போது கனடிய படைகளுக்கான ஆயுத இருப்பு சரிந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. கனடிய பாதுகாப்பு அமைச்சர் ப்ரீத்தி ஆனந்த் இதுபற்றி பேசும்போது தங்களது நட்பு நாடுகளுடன் இதுபற்றி ஆலோசித்து உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் இந்த அபாய நிலையால் கனடிய […]

Read More

ஆறே மணி நேரத்தில் சுமார் 40,000 கெமிக்கல் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு !!

March 22, 2022

Collqbarations Pharmaceuticals Inc எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒரு AI செயலியை தனது மருந்து கண்டுபிடிப்பு பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. MEGASYN எனும் பெயர் கொண்ட அந்த சுய அறிவு கொண்ட செயலியானது 6 மணி நேரத்தில் சுமார் 40,000 கெமிக்கல் ஆயுதங்களின் ஃபார்மூலாவை கண்டுபிடித்துள்ளது. இவற்றில் சில கெமிக்கல் ஆயுதங்களின் ஃபார்மூலாவானது உலக வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்க பட்டதிலேயே சக்திவாய்ந்த நரம்பு மண்டலத்தை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகளாவிய […]

Read More

ரஷ்யாவுக்கு பயந்து நேட்டோ எங்களை ஏற்று கொள்ளவில்லை உக்ரைன் அதிபர் !!

March 22, 2022

திங்கட்கிழமை அன்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி நேட்டோ அமைப்பானது ரஷ்யாவுக்கு பயந்து தங்கள் நாட்டை சேர்க்க அனுமதிக்கவில்லை என விமர்சித்துள்ளார். மேலும் நேட்டோ அமைப்பு வெளிப்படையாக ஒன்று எங்களை சேர்த்து கொள்கிறோம் அல்லது ரஷ்யாவுக்கு பயந்து சேர்த்து கொள்ளமாட்டோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஒரு நாளும் உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையவோ அல்லது அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுகொள்ளவோ போவதில்லை எனவும் தெரிவித்தார்.

Read More

உக்ரைனில் உயிரியியல் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டம் -ஜோ பைடன் !!

March 22, 2022

உக்ரைனில் நடைபெறும் போரில் ரஷ்யா உயிரியியல் மற்றும் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அவர் ரஷ்யா உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் இருப்பதாக முன்வைத்துள்ள குற்றசாட்டை பொய்யான தகவல் எனவும் மறுத்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உயிரியியல் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More

தனது மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கு ஈரானை வைத்து அதிர்ச்சி அளித்த அமெரிக்கா !!

March 22, 2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே ஈரானுடன் அதிக அளவில் நெருக்கம் காட்டி வருகிறது. தற்போது அமெரிக்கா தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஈரானிய ராணுவத்தை விலக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரான் உடனான சிவில் […]

Read More

எங்களது படையணிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை இந்திய விமானப்படை !!

March 22, 2022

சமீபத்தில் பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய விமானப்படை அதிகாரிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் சமாளிக்க எங்களிடம் போதுமான படையணிகள் இல்லை எனவும் தற்போது இந்திய விமானப்படையிடம் உள்ள திறன்களை தக்கவைக்க மேலும் அதிகளவில் நிதி ஆதாரங்கள் தேவைப்படும் எனவும் கூறியுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு 34 படையணிகள் இருந்தன தற்போது 29-30 படையணிகள் உள்ளன, இன்னும் மூன்று ஆண்டுகளில் 26-27 என்ற அளவை தொடக்கூடும். ஆகவே இந்திய விமானப்படைக்கு […]

Read More