Day: March 20, 2022

சுதேசி அர்ஜுன் டாங்கிகளை வாங்க இந்தியாவை அணுகிய பஹ்ரைன் !!

March 20, 2022

இந்தியா முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்த அர்ஜுன் மார்க்1ஏ/2 ரக டாங்கியின் மீது பஹ்ரைன் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தற்போது பஹ்ரைன் அரசு இந்திய அரசை அணுகி அர்ஜூன் மார்க்-1ஏ/2 டாங்கிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இரண்டு தரப்பினரும் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர் தற்போது பஹ்ரைன் 180 அமெரிக்க ஏப்ராம்ஸ் டாங்கிகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் மார்க்-1ஏ/2 ரக டாங்கிகள் முந்தைய மார்க்-1 டாங்கிகளின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும் […]

Read More

உக்ரைன் ரஷ்யா தயாரிக்கும் 14 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் !!

March 20, 2022

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் சிறப்பாக இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் 14 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை இணைந்து கலந்து பேசி தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 14 அம்சங்கள் என்னவென்று தெரியவில்லை ஆனால் இரண்டு நாடுகளும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைளின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. ரஷ்யாவின் விருப்பப்படி உக்ரைன் நேட்டோ உள்ளிட்ட எந்த அமைப்பிலும் இணைய […]

Read More

மேலும் அதிக ரஷ்ய எண்ணெய் வாங்கிய இந்தியா அதிகரிக்கும் எரிசக்தி உறவுகள் !!

March 20, 2022

ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 3 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நிலையில் தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பேசும்போது குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணெயை நிச்சயமாக இந்தியா வாங்கும் என தெரிவித்தனர். ஆகவே நிபுணர்கள் இனி இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான எரிசக்தி சார்ந்த உறவுகள் நன்கு வலுவடையும் என […]

Read More

சீன டாங்கி கோளாறு பாக் ராணுவ அதிகாரி மரணம் !!

March 20, 2022

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சீன தயாரிப்பு டாங்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறால் கேப்டன் அந்தஸ்திலான ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். அதாவது அந்த டாங்கியின் குழாயில் குண்டு வெளியேறாமல் சிக்கி வெடித்து சிதறியது இதில் கேப்டன் உயிரிழந்த நிலையில் டாங்கியின் கன்னர் படுகாயம் அடைந்துள்ளார். அனேக பட்சமாக விபத்துக்குள்ளான டாங்கி பாகிஸ்தான் இறக்குமதி செய்த MBT3000 என அறியப்படும் VT4 பிரதான சண்டை டாங்கியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Read More

உக்ரைன்: உலகில் முதல்முறையாக போரில் பயன்படுத்தப்படும் ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் !!

March 20, 2022

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போரில் மற்றுமொரு முக்கிய திருப்பம் நடைபெற்றுள்ளது. அதாவது உலகில் முதல்முறையாக ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தற்போது இந்த போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யா முதல்முறையாக தனது கின்சால் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை ஏவி உக்ரைனுடைய முக்கிய ஆயுத கிடங்கை தகர்த்துள்ளத இதனை இரு தரப்பினரும் உறுதி செய்து உள்ளனர். ஒலியை விட 10 மடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணைகளை எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் தடுக்க முடியாது இவற்றை Mig31 மற்றும் Tu22m3 […]

Read More

சீனா உடன் மோதலை விரும்பவில்லை, தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா ஆதரிக்காது பைடன் !!

March 20, 2022

இன்று அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வீடியோ கான்ஃபரஸிங் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் அமெரிக்கா சீனா உடனான பனிப்போரை விரும்பவில்லை எனவும் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை எனவும் அதே போல சீனாவை குறிவைத்து எந்த கூட்டணியையும் அமெரிக்கா உருவாக்கவில்லை மேலும் சீனா உடனான மோதலையும் அமெரிக்கா விரும்பவில்லை என கூறியுள்ளார். இரண்டு அதிபர்களும் தங்களது அதிகாரிகளுக்கு இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்படுத்தி […]

Read More