ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் இந்தியா சுமார் 3 மில்லியன் பேரல்கள் அளவிலான கச்சா எண்ணெயை மலிவு விலையில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிலையில் இதனை கண்டித்து பல்வேறு அமெரிக்க ஐரோப்பிய புவிசார் அரசியல் நிபுணர்கள் இந்தியா மீது தங்களது வன்மத்தை கக்கி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க ஊடகவியலாளர் ட்ரிஷ் ரேகன் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் அது இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விடும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் […]
Read Moreஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மலிவான விலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த வகையில் சுமார் 3 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெயை மார்ச் மாத தேவைக்காக விடால் எனும் ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர். விடால் நிறுவனம் ஒரு பேரலுக்கு 20 முதல் 25 டாலர் எனும் தள்ளுபடி விலைக்கு இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை விற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அபு தாபியின் முர்பன் நிறுவனத்திடம் இருந்து 2 […]
Read Moreஉக்ரைன் நாட்டின் ராணுவத்தில் உள்ள வெளிநாட்டவர்களின் படைப்பிரிவில் ரஷ்யர்கள் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள் உளவு பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் GRU மற்றும் SVR அமைப்புகளை சேரந்த சிறப்பு படை வீரர்கள் மேற்குறிப்பிட்ட படையணிகளை உக்ரைனுக்கு சண்டையிட சென்றுள்ள வெளிநாட்டவர்களை போல் ஊடுருவி வேவு பார்த்து வருகின்றனர். சமீபத்தில் உக்ரைன் நாட்டில் உள்ள யாவோரிவ் படைத்தளம் மீது நடைபெற்ற ரஷ்ய ஏவுகணை தாக்குதல் இத்தகைய உளவாளிகளின் உதவியோடு நடைபெற்றதாக மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. […]
Read Moreஉக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையில் மூன்று முன்னாள் பிரிட்டிஷ் சிறப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 6 மைல்கள் தொலைவில் உள்ள யாவோரிவ் படைதளத்தில் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. உக்ரைனுக்கு சண்டையிட சென்றுள்ள வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த இந்த தளத்தின் மீது ரஷ்யா சுமார் 30 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மோதி தாக்கின. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக கருதப்படும் நிலையில் மூன்று […]
Read Moreபாகிஸ்தான் தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹமூத் உஸ் ஸமன் கான் பாகிஸ்தான் தரைப்படையின் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமை அதிகாரி ஆவார். இவர் தற்போது இந்திய பிரம்மாஸ் ஏவுகணை ஊடுருவலை தடுக்க தவறிய காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இவருடன் சேர்த்து இரண்டு மூத்த பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகளும் ஒய்வெடுக்க வற்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பாகிஸ்தான் விமானப்படையின் துணை தளபதியான ஏர் மார்ஷல் அஹமது ஷெஹ்சாத் […]
Read Moreரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வருமாறு அமெரிக்க தொழிலதிபரும் பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க் அழைத்துள்ளார். இந்த சண்டை உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும் என கூறியுள்ளார் அதாவது வெற்றி பெரும் நபரை பொறுத்து உக்ரைனுடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்றார். இதற்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டிமித்ரி ரோகோஸின் எதிர்ப்பு தெரிவித்த கையோடு எலான் மஸ்க்கை காட்டமாக விமர்சித்துள்ளார்.
Read Moreபோர் விமானங்களில் இருந்து ஏவப்படும் சிறிய பிரம்மாஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் சேவையில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். சுகோய்30 போர் விமானங்கள் சுமந்து செல்லும் வகையிலான இந்த பிரம்மாஸ் ஏவுகணைகள் வெறுமனே 300 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை மட்டுமே கொண்டிருந்த நிலையில் அதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்த புதிய பிரம்மாஸ் ஏவுகணை தாக்கி அழிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. […]
Read Moreஉக்ரைன் போரில் உதவுமாறு ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவல் எப்படி கிடைத்தது என்பது பற்றிய ஆதாரத்தை அவர்கள் வெளியிட மறுத்ததோடு இந்த கோரிக்கை போர் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே முன்வைக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால் சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் மோசமான நோக்கத்துடன் கூடிய போலி தகவல் என விமர்சித்துள்ளார். அதே போல் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கொவ் ரஷ்யாவுக்கு […]
Read Moreசீன கடற்படைக்கு சொந்தமான Y8 ரக கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு/வேட்டை விமானம் தென்சீன கடல் பகுதியில் மோதி விபத்தை சந்தித்து உள்ளது. இந்த தகவலை தைவான் நாட்டின் உளவுத்துறையான தேசிய பாதுகாப்பு முகமையின் தலைவர் சென் மிங் டாங் உறுதிப்படுத்தி வெளியிட்டுள்ளார். மேலும் இதனை மறைத்து தேடுவதற்கு தோதாக விபத்துக்குள்ளான பகுதியில் கடற்படை போர் பயிற்சி என்ற பெயரில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More