உக்ரைனில் சண்டையிட வரும் சிரிய வீரர்களுக்கு 1100 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 16, 2022
  • Comments Off on உக்ரைனில் சண்டையிட வரும் சிரிய வீரர்களுக்கு 1100 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் ரஷ்யா !!

ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் போரில் சிரிய நாட்டை சேர்ந்த வீரர்களை களமிறக்க உள்ளதாகவும் 16,000 சிரிய வீரர்கள் இதற்கு தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்

தற்போது சுமார் 40,000 சிரிய வீரர்கள் வரை ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் களமிறங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்கள் சிரிய ராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இப்படி உக்ரைனுக்கு சண்டையிட செல்வோருக்கு சுமார் 11,00 அமெரிக்க டாலர்கள் சம்பளம் காயமடைந்தால் 7,700 அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு 16,500 டாலர்கள் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1100 டாலர் என்றால் இந்திய மதிப்பில் 89,000 ரூபாய், 7700 டாலர் என்றால் 5,87,000 ரூபாய், 16500 டாலர் எனில் 12,59,000 இந்திய ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.