Breaking News

Day: March 10, 2022

பட்ஜெட் செலவுகளை கண்காணிக்க குழு அமைக்கும் பாதுகாப்பு அமைச்சகம் !!

March 10, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கான பட்ஜெட் செலவு செய்யப்படும் போக்கை கண்காணிக்க பிரத்யேக குழு ஒன்றை அமைக்க உள்ளது. இந்த குழுவானது முப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை எப்படி செலவு செய்கின்றன, சரியாக செலவு செய்கின்றனவா ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் செலவு செய்யப்படுகிறதா என கண்காணிக்கும். இந்த கண்காணிப்பு குழுவில் முப்படைகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இருப்பர் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இறக்குமதி ரத்து உள்நாட்டிலேயே இலகுரக டாங்கி தயாரிக்க அனுமதி !!

March 10, 2022

இந்திய தரைப்படைக்கு மலை பிரதேச பகுதிகளில் சண்டையிடும் திறன் கொண்ட இலகுரக டாங்கியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்ப்ரூட் இலகுரக டாங்கிகள் தேர்வு செய்யப்பட்டு இந்திய தரைப்படையின் தேவைகளை சமாளிக்க அவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இறக்குமதி செய்வதற்கான முடிவை ரத்து செய்துள்ளது மேலும் உள்நாட்டிலேயே இலகுரக டாங்கியை தயாரிக்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இதற்கான டென்டரில் […]

Read More

தன்னிச்சையான ஆயுத சோதனை மற்றும் தர நிர்ணய அமைப்பை உருவாக்கும் இந்தியா !!

March 10, 2022

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒரு தன்னிச்சையான ஆயுத சோதனை மற்றும் தர சான்றிதழ் அமைப்பை உருவாக்க முடிவெடுத்து உள்ளது. இந்தியாவின் தனியார் நிறுவனங்களுடைய ஆயுதங்களை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இந்த அமைப்பு சோதனை செய்து தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் இதன்மூலம் சுதேசி தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதுவரை தனியார் நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களை சோதனை செய்ய அதிகாரமிக்க பாரபட்சம் காட்டும் செயல்திறன் குன்றிய பொதுத்துறை நிறுவனங்களையே சார்ந்திருக்கு வேண்டிய மோசமான நிலை நிலவி வந்தது. […]

Read More

உக்ரைனுக்கு சண்டையிட செல்லும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க உக்ரைன் முடிவு !!

March 10, 2022

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட செல்லும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த வெளிநாட்டவர்கள் திரும்பவும் தங்களது நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தந்த நாடுகளில் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படலாம். எனவே அத்தகைய சூழ்நிலைகளையும் அந்த வெளிநாட்டவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு உக்ரைன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Read More

லலன் ஃபயரிங் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த உள்நாட்டு பிரங்கி !!

March 10, 2022

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்ற லைன் ஃபயரிங் சோதனையை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் பிரங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பிரங்கி தொழிற்சாலை இந்த பிரங்கிகளை தயாரித்துள்ளது சில குறைகளை நிவர்த்தி செய்த நிலையில் தற்போது அவை சோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டு பிரங்கிகளும் நிலையான இடத்தில் இருந்து தலா 45 ரவுண்டுகளை சுட்டன பின்னர் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தலா 45 ரவுண்டுகளை சுட்டன. இப்படி இரண்டு […]

Read More

ரஷ்ய யூரேனியத்திற்கு தடை விதிக்காத அமெரிக்கா !!

March 10, 2022

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரேனியத்திற்கு மட்டும் தடை விதிக்காமல் அமெரிக்க அரசானது விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அணு உலைகளுக்கான எரிபொருளான யூரேனியம் ரஷ்யாவில் இருந்து தான் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பெரும்பாலும் அணு சக்தி சார்ந்த மின்சார உற்பத்தியை நம்பியிருக்கும் அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரேனியத்திற்கு விலக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3% அளவிலான கச்சா […]

Read More

தற்போதும் 285 மில்லியன் டாலர் வருவாயை ஐரோப்பாவில் இருந்து பெறும் ரஷ்யா !!

March 10, 2022

ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால் ஐரோப்பிய நாடுகள் தினமும் சுமார் 285 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை ரஷ்யாவுக்கு செலுத்தி வருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் பல்வேறு தடைகளை மேற்குலக நாடுகள் விதித்த நிலையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட தகவல் தெரிய வந்துள்ளது. ரஷ்யா கடந்த ஆண்டு ஐரோப்பாவுக்கு கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து சுமார் 104 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. அதுவே கடந்த வருடம் […]

Read More

உக்ரைனுக்கு மறைமுகமாக போர் விமானங்கள் வழங்க ஒப்பு கொண்ட போலந்து !!

March 10, 2022

போலந்து அரசு உக்ரைனுக்கு மறைமுகமாக தனது நாட்டின் விமானப்படை பயன்படுத்தி வரும் மிக் 29 ரக போர் விமானங்களை வழங்க முன்வந்து உள்ளது. அமெரிக்காவுடன் எட்டப்பட்ட முடிவின்படி போலந்து விமானப்படை 28 மிக்-29 போர் விமானங்களை ஜெர்மனியில் உள்ள அமெரிக்காவின் ராம்ஸ்டெய்ன் விமானப்படை தளத்திற்கு மாற்றம் செய்யும். அங்கிருந்து அந்த மிக்29 போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் விமானப்படைக்கு கைமாறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இதன்மூலம் மறைமுகமாக உக்ரைனுக்கு போர் விமானங்கள் கிடைக்கும். 5 மிக்29ஏ, 11 […]

Read More

ஆம்கா விமானத்தின் தயாரிப்பு பணிகள் துவக்கம் !!

March 10, 2022

நமது நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நேற்று ஐந்தாம் தலைமுறை ஆம்கா விமானத்தின் தயாரிப்பு பணிகளை துவங்கி உள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் வானூர்தி மேம்பாட்டு முகமை ஆகியவை இந்த பணிகளை இணைந்து துவங்கி உள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ளது. இரட்டை என்ஜின் இரட்டை இருக்கை மற்றும் ஒற்றை இருக்கை வசதி கொண்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான இது இந்திய கடற்படை மற்றும். இந்திய […]

Read More

அனுபவமற்றோர் உக்ரைன் போரில் கலந்து கொள்ள வேண்டாம் எச்சரிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் சிறப்பு படை வீரர் !!

March 10, 2022

ஃபில் காம்பியன் 1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பின்னர் சிறப்பு படைகளுக்கான சோதனையில் தேர்வு பெற்று SAS படையில் இணைந்தார். இவர் நீண்ட நெடிய சண்டை மற்றும் போர் அனுபவம் மிக்கவர் ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள கருத்து பலரின் கவனத்தை பரவலாக ஈர்த்துள்ளது. அதாவது எவ்வித பயிற்சியும் சண்டை அல்லது போர் அனுபவமோ இல்லாத ராணுவத்தில் பனியாற்றாத எவரும் உக்ரைன் போரில் கலந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஒரு ராணுவ வீரரை பயிற்சி […]

Read More