Day: March 7, 2022

பொருளாதார தடைகள் போர் தொடுக்கும் செயலுக்கு நிகரானவை ரஷ்ய அதிபர் புடின் !!

March 7, 2022

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தனது நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் செயலானது போர் தொடுக்கும் நடவடிக்கைக்கு நிகரானதாகும் என கூறியுள்ளார். மேற்குலக நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது அதே நேரத்தில் ரஷ்யாவும் பதிலுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே போல தனக்கு எதிரான நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டு இங்கிலாந்தின் தடைகளை ஒருநாளும் மறக்க மாட்டோம் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

தனக்கு எதிரான நாடுகளின் பட்டியலை அறிவித்த ரஷ்யா !!

March 7, 2022

பல வார மிரட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பின்னர் தனக்கு எதிரான நாடுகளின் பட்டியலை ரஷ்யா இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா இங்கிலாந்து கனடா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து சிங்கப்பூர் தென்கொரியா தைவான் உள்ளிட்ட 17 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைன் பற்றியும் குறிப்பிட பட்டுள்ளது. அமெரிக்கா ரஷ்ய அதிபர் புடின், அமைச்சர்கள், தொழிலதிபர்தள் உள்ளிட்டோர் மீதும் தடைகளை விதித்து பொருளாதார அமைப்பில் இருந்தும் […]

Read More

உக்ரைன் ரஷ்யா இடையே சமாதானம் செய்து வைக்க தயார் சீனா அறிவிப்பு !!

March 7, 2022

சீனாவின் வெளியுறவு அமைச்சரான வாங் யி ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பிரச்சினையில் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க சீனா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வருடாந்திர ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்கள் இடையே பேசிய அவர் சர்வதேச சமுகத்துடன் இணைந்து தேவைப்படும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் சீனா கடந்த மாதம் இறுதியில் ரஷ்யாவை கண்டிக்க மறுத்ததும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வான் தான் எல்லை எனவும் […]

Read More

காந்தஹார் விமான கடத்தல் பயங்கரவாதி பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டு கொலை இந்தியாவின் “ரா” செயலா ??

March 7, 2022

பாகிஸ்தானின் கராச்சி நகரில் காந்தஹார் விமான கடத்தலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியான மிஸ்த்ரி ஸாஹூர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளான். காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் IC814 விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகளில் ஒருவன் தான் மிஸ்த்ரி ஸாஹூர் இவனுக்கு காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களிலும் தொடர்பு உண்டு. இப்படி பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக இருந்த இவன் பெயரை ஸாஹீத் என மாற்றி கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம […]

Read More

ரஷ்ய ராணுவ வாகனங்களின் தடுமாற்றத்திற்கு சீன டயர்கள் காரணமா ??

March 7, 2022

சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் தலைநகர் க்யிவை நோக்கி மிகப்பெரிய ரஷ்ய ராணுவ கான்வாய் ஒன்று நகர்வதாக பார்த்தோம் ஆனால் அந்த கான்வாய் இன்னும் தலைநகரை எட்டவில்லை. இதற்கு காரணமாக ஆங்காங்கே உக்ரைனிய தாக்குதல், பராமரிப்பு, எரிபொருள் தட்டுபாடு போன்ற காரணங்கள் பல்வேறு ராணுவ பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான மற்றொரு காரணம் என்னவென்றால் ரஷ்ய ராணுவ வாகனங்களில் பயன்படுத்தி வரப்படும் மலிவான சீன தயாரிப்பு டயர்கள் என்பதாகும். Yellow sea YS20 எனப்படும் […]

Read More

உக்ரைன் போரில் பங்கு பெறும் முன்னாள் பிரிட்டிஷ் மரைன் கமாண்டோக்கள் !!

March 7, 2022

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதை அடுத்து அந்நாட்டு அரசு உலகளாவிய ரீதியில் சண்டையிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி பிரிட்டிஷ் ராயல் மரைன் கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளனர். சுமார் 100 ஒய்வு பெற்ற வீரர்கள் தற்போது க்யிவ் நகரில் உள்ளதாகவும் விரைவில் ரஷ்ய படைகளுடனான மோதலில் பங்கெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

உக்ரைன் போரில் கலந்து கொள்ள செல்லும் தென் கொரிய முன்னாள் சிறப்பு படை வீரர்கள் !!

March 7, 2022

தென் கொரிய கடற்படையில் பணியாற்றி ஒய்வு பெற்ற முன்னாள் சிறப்பு படை வீரர்களின் குழு ஒன்று உக்ரைனுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் தென் கொரிய கடற்படையின் UDT SEAL படைப்பிரிவை சேர்ந்த கேப்டன் லீ க்வூன் இதனை தெரிவித்து உள்ளார். மேலும் தாங்கள் திரும்பி வரும் போது தென் கொரிய அரசு தங்களை தண்டிக்கலாம் (1 வருட சிறை) என தெரிந்தே செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

பிரம்மாஸ் ஏவுகணையின் நவீன வடிவம் வெற்றிகரமாக சோதனை !!

March 7, 2022

இந்திய கடற்படை தனது நாசகாரி போர் கப்பல் ஒன்றில் இருந்து தொலைதூர தாக்குதல் திறன் கொண்ட பிரம்மாஸை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தொலைதூர தாக்குதல் திறன் கொண்ட பிரம்மாஸ் ஏவுகணையின் அதிநவீன வடிவம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சோதனையின் போது இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் கூறிய நிலையில் தாக்குதல் வரம்பை மட்டும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. இந்த வருடம் மட்டும் […]

Read More

உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க போலந்து மறுப்பு ரஷ்ய மிரட்டல் காரணமா ??

March 7, 2022

அமெரிக்க அரசு சமீபத்தில் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கலாம் அதில் பிரச்சினை ஏதும் இல்லை என கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைனுக்கு போலந்து பயன்படுத்தி வரும் மிக்29 போர் விமானங்களில் 29ஐ வழங்கினால் அமெரிக்கா 29 எஃப்-16 ரக போர் விமானங்களை போலந்து நாட்டின் விமானப்படைக்கு வழங்கும் என தெரிவித்தது. ஆனால் போலந்து அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது உக்ரைனுக்கு தனது போர் விமானங்களை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய அதிபர் […]

Read More

அமெரிக்க விமானத்தில் சீன கொடியை வரைந்து ரஷ்யா மீது குண்டுவீச வேண்டும் !!

March 7, 2022

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் அவரது குடியரசு கட்சிக்கு அதிகளவில் நிதி வழங்குவோர் இடையே சமீபத்தில் பேசினார். அப்போது அவர் அமெரிக்காவின் எஃப்-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தில் சீன கொடியை வரைந்து ரஷ்யா மீது குண்டுவீசி தாக்குதல் நடத்த வேண்டும் என பேசியுள்ளார். பின்னர் அந்த பழியை சீனா மீது போட்டு விடலாம் இதனால் ரஷ்யா மற்றும் சீனா இடையே மோதல் நடைபெறும் நாம் வேடிக்கை பார்க்கலாம் என கூறியுள்ளார். அவர் ரஷ்ய உக்ரைன் […]

Read More