Day: March 5, 2022

தகவலறியும் சட்டத்தில் இருந்து விலக்கு கோரும் முப்படைகள் !!

March 5, 2022

இந்தியாவின் முப்படைகளும் தகவலறியும் உரிமை சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு செயலர்கள் கமிட்டியிடம் முறையிட்டுள்ளன. உள்துறை பாதுகாப்பு துறை வருவாய்த்துறை கேபினட் செயலர் ஆகியோர் அடங்கிய கமிட்டியிடம் தற்போது இந்த முறையீடு சமர்ப்பிக்க பட்டுள்ள நிலையில் அவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். போர் காலத்திலும் அமைதி காலத்திலும் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் படைகளை இந்த சட்டத்திற்குள்ளாக்கும் செயல்பாடு நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்து விளைவிக்கும் எனவும் கூறியுள்ளன. நாட்டின் முதலாவது கூட்டு படை தலைமை […]

Read More

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் !!

March 5, 2022

சவுதி அரேபிய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என அந்நாட்டு பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நலன்களை பற்றி மட்டுமே அமெரிக்கா கவலைப்பட வேண்டும் எனவும் இதற்காக அமெரிக்க அதிபர் பைடன் தன்னை தவறாக நினைத்தாலும் கவலையில்லை என கூறியுள்ளார். எப்படி நாங்கள் உங்களுக்கு பாடம் எடுக்க கூடாதோ அது போல தான் நீங்களும் எங்களுக்கு பாடம் எடுக்க கூடாது என்றார் முன்னாள் அதிபர் ட்ரம்ப் […]

Read More

தள்ளி வைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் பிரமாண்ட போர் ஒத்திகை !!

March 5, 2022

மார்ச் 7ஆம் தேதி முதல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படை இந்த வருடம் வாயு ஷக்தி எனும் மிகப்பெரிய பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி இந்த பிரமாண்ட போர் ஒத்திகையானது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பிரமாண்டபோர் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை மேலும் மறு தேதி பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தனது முதல் ட்ரோனை அறிமுகப்படுத்த உள்ள இந்திய நிறுவனம் !!

March 5, 2022

ஹைதராபாத் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் மேக்னம் விங்ஸ் (MAGNUM WINGS) நிறுவனம் தனது முதல் ட்ரோனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனம் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தனது தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட MW VIPER எனும் ஆளில்லா விமானத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாக கூறி உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிராம் சாவா பேசும்போது அமெரிக்காவில் இந்த நிறுவனத்தை துவங்கியதாகவும் பின்னர் நீண்ட ஆய்வுக்கு பிறகு தற்போது இந்தியாவில் இந்த நிறுவனத்தை […]

Read More

கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்ட பாதுகாப்பு கண்காட்சி 2022 !!

March 5, 2022

குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்த வருடம் நடைபெற இருந்த பாதுகாப்பு கண்காட்சி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது. மார்ச் 10 முதல் 14 வரை இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா உக்ரைன் உட்பட சுமார் 55 நாடுகளில் இருந்து 1000 நிறுவனங்கள் கலந்து கொள்ள இருந்தன. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களது பொருட்களை கொண்டு வந்து காட்சிபடுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுவதால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி நிகழ்விற்கு […]

Read More

இந்திய நீர்மூழ்கியை இடைமறித்ததாக கூறிய பாகிஸ்தான் !!

March 5, 2022

சமீபத்தில் பாகிஸ்தான் இந்திய கடற்படையின் அதிநவீன கல்வரி நீர்மூழ்கி ஒன்றை அந்நாட்டு எல்லைக்குள் இடைமறித்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் முப்படைகளின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் இந்த செய்தியையும் அதுபற்றிய காணொளியையும் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கண்காணிப்பு மற்றும் வேட்டை விமானம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ஆனால் இந்திய கடற்படை நீர்மூழ்கி படையினர் வேண்டுமென்றே பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றே கடல்பரப்பிற்கு மேலே வந்து இந்திய நீர்மூழ்கிகளின் […]

Read More

இந்திய கொடியை தவிர்த்து மற்ற நாட்டு கொடிகளை மறைத்த ரஷ்யா !!

March 5, 2022

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மோஸ் விரைவில் ஏவ இருந்த ராக்கெட்டில் இந்திய கொடியை தவிர்த்து வேறு நாடுகளின் கொடிகளை மறைத்துள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து ஜப்பான் ஆகிய நாடுகளின் கொடிகளை மறைத்த நிலையில் இந்தியா தென்கொரியா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளின் கொடிகளை மறைக்கவில்லை. ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமித்ரி ரோகோஸின் கஸகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் எடுக்கப்பட்ட இதுகுறித்த காணொளியை வெளியிட்டு உள்ளார். சோயூஸ் ரக ராக்கெட்டான அது விரைவில் பல்வேறு நாடுகளை […]

Read More

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையை கைப்பற்றிய ரஷ்ய படைகள் !!

March 5, 2022

உக்ரைனில் உள்ள ஸப்பஸிரோஸியா அணு உலை ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு உலை ஆகும் இந்த அணு உலையை தற்போது ரஷ்ய படைகள் கைபற்றி உள்ளனர். இதற்கான நீண்ட நேரம் நடைபெற்ற சண்டையின் போது துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன இதனால் ஒரு கட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த தீ விரைவிலேயே அணைக்கப்பட்டு நிலைமை கட்டுபாட்டுக்குள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. உக்ரைன் அதிபர் அமெரிக்க தூதர் உள்ளிட்டோரும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இதன் காரணமாக ரஷ்யாவுக்கு […]

Read More