Day: March 3, 2022

இந்தியாவுக்கான எஸ்400 டெலிவரிக்கு எவ்வித இடையூறும் இல்லை -ரஷ்யா !!

March 3, 2022

இந்தியாவுக்கான அடுத்த ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டெனிஸ் அலிபோவ் இந்தியாவுக்கான எஸ்400 டெலிவரிக்கு எவ்வித இடையூறும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்தியா எப்போதும் எங்களுடைய மிக நெருங்கிய நட்பு நாடு எனவும் இந்தியாவின் நடுவிலையான நிலைபாட்டை ரஷ்யா வரவேற்பதாகவும் கூறினார். மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளால் இந்தியாவுக்கான டெலிவரிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதி அளித்தார்.

Read More

148 போர் விமானங்கள் பங்கேற்கும் இந்திய விமானப்படையின் போர் பயிற்சி !!

March 3, 2022

இந்திய விமானப்படையானது வாயு ஷக்தி என்ற பெயரில் மார்ச் 7 முதல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மிகப்பெரிய போர் பயிற்சி நடத்த உள்ளது . இதில் இந்திய விமானப்படையின் 148 போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன குறிப்பாக ரஃபேல் முதல் முறையாக பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பயிற்சியில் இந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ஜாகுவார், தேஜாஸ், மிக்-29, சுகோய்-30, ரஃபேல் உள்ளிட்ட […]

Read More

கடினமான சூழல் தான் ஆனாலும் இந்திய ரஷ்ய உறவு தொடரும் !!

March 3, 2022

இந்திய விமானப்படையின் துணை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் சந்தீப் சிங் புவிசார் அரசியல் சூழல் கடினமாக தான் உள்ளது ஆனாலும் இந்திய ரஷ்ய உறவு தொடரும் என்றார். மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் விதித்துள்ள தடைகளால் இந்திய விமானப்படைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தற்போது முன்று சி-17 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கடைசி இந்தியர் மீட்கப்படும் வரை விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Read More

26 போர் கப்பல்கள், 21 வானூர்திகள் மற்றும் 1 நீர்மூழ்கி பங்கேற்கும் பன்னாட்டு போர் ஒத்திகை !!

March 3, 2022

இந்திய கடற்படை நடத்தும் மிலன்-2022 பன்னாட்டு போர் ஒத்திகை வங்க கடலில் நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த போர் ஒத்திகையில் 26 போர் கப்பல்கள், 21 வானூர்திகள் மற்றும் 1 நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பங்கேற்றுள்ளதாக கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 40க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கும் இப்பயிற்சியில் நீர்மூழ்கி எதிர்ப்பு , ஆயுத தாக்குதல், வீரர்கள் பரிமாற்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மூன்றாவது உலகப்போர் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத போராக இருக்கும் ரஷ்ய அமைச்சர் !!

March 3, 2022

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ரஷ்யாவுக்கு பல நட்பு நாடுகள் உள்ளதாகவும் ரஷ்யாவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். உக்ரைன் அணு ஆயுதம் பெற ஒருநாளும் ரஷ்யா அனுமதிக்காது மேலும் உக்ரைனில் உள்ள தாக்குதல் ஆயுதங்களை ரஷ்ய படைகள் அகற்றி விடும் எனவும் தெரிவித்தார். இந்த தடைகளை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் விளையாட்டு வீரர்கள் ஊடகத்தினர் கலைஞர் மீதான தடைகளை எதிர்பார்க்கவில்லை. மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் கோரிக்கைகளை சற்றும் மதிக்கவில்லை ஐரோப்பாவுக்கான […]

Read More