Day: March 2, 2022

BREAKING இந்தியர்கள் கார்கிவ் நகரை விட்டு வெளியேற 6 மணி நேரம் அனுமதி அளித்த ரஷ்யா !!

March 2, 2022

உக்ரைனுடைய கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரம் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும், இந்த நகரம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இங்கு பல ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் போரால் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று காலை ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உணவு வாங்க சென்ற இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார் இதனௌ தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை ரஷ்யாவை தொடர்பு […]

Read More

போருக்கு முந்தைய நாள் மாயமான ரஷ்ய அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் !!

March 2, 2022

கடந்த 23ஆம் தேதி ரஷ்ய கடற்படையின் வடக்கு ஆர்ட்டிக் படைப்பிரிவை சேர்ந்த 12ஆவது படையணி மற்றும் 31ஆவது நீர்மூழ்கி டிவிஷனை சேர்ந்த 2 நீர்மூழ்கிகள் மாயமாகி உள்ளன. அதாவது போரேய் ரக அணுசார் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கிகள் 2 தற்போது காத்ஸியேவோ கடற்படை தளத்தில் இல்லை என செயற்கை கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. வழக்கமாக 2 போரேய் மற்றும் 5 டெல்டா-4 ரகம் என மொத்தமாக 7 அணுசார் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கிகள் இந்த […]

Read More

இந்திய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள் !!

March 2, 2022

உக்ரைன் நாட்டில் கடுமையான போர் சூழல் நிலவி வருவதால் இந்திய மாணவர்களை இந்திய அரசு மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முடியாமல் தூதரக உதவி ஏதும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கொடியை தங்களது வாகனங்களில் பயன்படுத்தி இந்திய மாணவர்கள் போன்று தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர் எனும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More

இந்தியர்களின் மீட்பு பணிகள் நிலவரம் வெளிநாட்டவர்களையும் மீட்க உத்தரவு !!

March 2, 2022

உக்ரைனில் இருந்து நேற்று மாலை வரை மட்டுமே சுமார் 12000 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. மேலும் இது அங்கிருக்கும் இந்தியர்களில் 60 சதவிகிதம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன தலைநகர் கீயிவ்வில் இந்தியர்கள் இல்லை என கூறப்படுகிறது. விரைவில் மீதமுள்ள குறிப்பாக கிழக்கு உக்ரைனில் உள்ள இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உதவி கோரும் பிறநாட்டவர்களையும் இந்தியா மீட்க உள்ளதாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் […]

Read More

உக்ரைன் மீட்பு பணியில் இந்திய விமானப்படை சி-17 விமானங்கள் !!

March 2, 2022

இந்திய பிரதமர் மோடியின் உத்தரவுபடி உக்ரைன் மீட்பு பணியில் இந்திய விமானப்படையின் சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்கள் ஈடுபட உள்ளன. ஆபரேஷன் கங்கா எனும் அந்த மீட்பு பணி திட்டதின்படி நாளை காலை ரோமேனியாவுக்கு முதலாவது விமானம் புறப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியர்களை மீட்டு வரும் கையோடு உக்ரைனுக்கு தேவையான மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

போர் குறித்து போலி தகவல்களை பரப்பும் நிலையங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா !!

March 2, 2022

ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீயிவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவைகள் பிரிவு என்ற உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் உக்ரைன் ராணுவத்தின் 72ஆவது உளவியல் தாக்குதல் பிரிவின் தலைமை அலுவலகம் ஆகியவற்றை போர் குறித்து போலி செய்திகள் பரப்பும் காரணத்திற்காக தாக்க போவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

தலைநகர் கீயிவ்வை நெருங்கும் மிகப்பெரிய ரஷ்ய ராணுவ படையணி !!

March 2, 2022

உக்ரைன் தலைநகர் கீயிவ்வை கடந்த சில நாட்களாக கைபற்ற ரஷ்ய படைகள் சற்றே திணறிய நிலையில் மீண்டும் கீயிவ்வை கைபற்ற முயற்சி நடைபெறுகிறது. அதன்படி ரஷ்ய தரைப்படையின் சுமார் 60 கிலோமீட்டர் நீளம் கொண்ட கான்வாய் ஒன்றை செயற்கை கோள் புகைப்படங்கள் வாயிலாக கண்டறிந்து உள்ளனர். டாங்கிகள், கவச வாகனங்கள், லாரிகள், சப்ளை வாகனங்கள் போன்றவை இதில் அடக்கம் எனவும் சில இடங்களில் மூன்று வரிசை அகலத்திற்கு பெரிதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் உளவுத்துறை ரஷ்யர்கள் […]

Read More

உக்ரைனுடைய இரண்டாவது பெரிய நகரம் மீது ரஷ்யா நடத்தி வரும் கடுமையான தாக்குதல் !!

March 2, 2022

இன்று காலை உக்ரைனில் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டாவது பெயிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படைகள் மிக கடுமையான தாக்குதல் நடத்தின. இதுவரை 10 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்து உள்ளதாகவும் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மற்றொரு பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் தரைப்படையின் பாசறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 உக்ரைனிய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, வெளியுறவு அமைச்சர் குலேபா போன்றோர் கடுமையான கண்டனங்களை […]

Read More

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் இந்திய மாணவர் மரணம் !!

March 2, 2022

உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் எனும் அந்த மாணவர் உணவிற்காக சென்ற போது கார்கிவ் நகர அரசு அலுவலகத்தின் மீது ரஷ்யா ஏவிய காலிபர் ரக க்ரூஸ் ஏவுகணை தாக்கி வெடித்ததில் இவரும் சிக்கி உயிரிழந்துள்ளார் மேலும் இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

Read More