உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த இரஷ்யப் படைகள்

  • Tamil Defense
  • February 28, 2022
  • Comments Off on உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த இரஷ்யப் படைகள்

உலகின் மிகப் பெரிய விமானமான AN-225 Mriya விமானத்தை இரஷ்யப் படைகள் அழித்துவிட்டதாக உக்ரேன் உறுதி செய்துள்ளது.

உக்ரேனின் கீவ் அருகே உள்ள ஒரு விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் இரஷ்ய படைகள் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக உக்ரேன் கூறியுள்ளது.இது குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்திய உக்ரேன் அதிகாரிகள் விமானத்தை மீண்டும் கட்டுவோம் என டிவிட்டரில் கூறியுள்ளனர்.

விமானத்தின் சேதம் குறித்த தற்போதைய நிலை தெரியவில்லை எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை பார்வையிட்ட பிறகே முழுசேத விவரம் தெரியும் என ஆன்டனோவ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

விமானத்தை மறுகட்டுமானம் செய்ய மூன்று பில்லியன் டாலர்கள் செலவாகலாம் எனவும் ஐந்து வருடங்கள் வரை அதற்கு தேவைப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.