இனி மேலதிக நேட்டோ படைகளை அனுமதிக்க முடியாது ஹங்கேரி அறிவிப்பு !!

  • Tamil Defense
  • February 13, 2022
  • Comments Off on இனி மேலதிக நேட்டோ படைகளை அனுமதிக்க முடியாது ஹங்கேரி அறிவிப்பு !!

நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடான ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் ஸிஜார்த்தோ யூரோ நியூஸ் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் இனி மேலதிக நேட்டோ படைகளை ஹங்கேரி நாட்டின் மண்ணில் அனுமதிக்க முடியாது என பகிரங்கமாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஹங்கேரி நாட்டின் படைகள் திறன் வாய்ந்தவை எனவும் நேட்டோவுக்கான பங்களிப்பு தொடரும் எனவும் கூறியுள்ளார்.

நேட்டோ படைகள் லாத்வியா எஸ்டோனியா லித்துவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் அதிகளவில் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.