விமானப்படையில் பெண் விமானிகளின் பங்கு

  • Tamil Defense
  • February 3, 2022
  • Comments Off on விமானப்படையில் பெண் விமானிகளின் பங்கு

இதுவரை விமானப்படையில் 16 பெண் போர் விமானிகள் இணைந்துள்ளனர் !!

முதலில் சோதனை முயற்சியாக பெண்கள் போர் விமானிகளாக இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த சோதனை கட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது வயை இந்திய விமானப்படையில் 16 பெண்கள் போர் விமானிகளாக இணைந்துள்ளனர், இதன் மூலம் வருங்காலத்தில் மேலதிக பெண் போர் விமானிகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றால் மிகையல்ல.

இந்திய கடற்படையும் விமானிகளாக பெண்களை இணைத்து வருகிறது மேலும் போர் கப்பல்களிலும் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.