அமெரிக்காவுடன் நல்லெண்ண பேச்சுவார்த்தைக்கு தயார் ரஷ்யா அதிபர் !!

  • Tamil Defense
  • February 16, 2022
  • Comments Off on அமெரிக்காவுடன் நல்லெண்ண பேச்சுவார்த்தைக்கு தயார் ரஷ்யா அதிபர் !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புடன் நல்லெண்ண பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார் என அறிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமேதும் இல்லை எனவும், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை ரஷ்யா விரும்புவதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் உடனான கிழக்கு , வடக்கு மற்றும் தெற்கு எல்லையோரம் 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் மற்றும் பெலாரஸில் மிகப்பெரிய போர் பயிற்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது