ஐ.எஸ் இயக்க தலைவனின் மரணம் அமெரிக்கா நடவடிக்கை !!

  • Tamil Defense
  • February 5, 2022
  • Comments Off on ஐ.எஸ் இயக்க தலைவனின் மரணம் அமெரிக்கா நடவடிக்கை !!

நேற்று முன்தினம் சிரியாவில் உள்ள அத்மே நகரத்தை ஒட்டிய பகுதியில் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவன் அல் குரேஷி பதுங்கி இருந்த வீட்டின் மீது அமெரிக்க சிறப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்க கூட்டு சிறப்பு படைகள் கட்டளையகதத்தின் டெல்டா மற்றும் 75ஆவது ரேஞ்சர் ரெஜிமென்ட் ஆகியவற்றை சேர்ந்த சிறப்பு படை வீரர்கள் இந்த தாக்குதல் நடத்திய போது தற்கொலை செய்து கொண்டான்.

அமெரிக்க வீரர்களிடம் சிக்கி விடக்கூடாது என நினைத்த அவன் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும் கூட குடும்பத்தினருடன் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டான் என அமெரிக்க ராணுவ அதிகாரி ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி கூறினார்.

அவனுடைய மரணத்தை தொடர்ந்து ஐ.எஸ் இயக்கத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.