லூஹான்ஸ்க் பகுதியை தாக்க முயற்சி செய்ததாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • February 21, 2022
  • Comments Off on லூஹான்ஸ்க் பகுதியை தாக்க முயற்சி செய்ததாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு !!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில் லூஹான்ஸ்க் பகுதி மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.

மாஸ்கோ நேரப்படி மாலை 5 மணியளவில் ஃபெப்ரவரி 20ஆம் தேதி உக்ரைன் ராணுவத்தின் 79ஆவது வான்வழி தாக்குதல் பிரிகேட் படையணியின் வீரர்கள்,

பயோனெர்ஸ்கோயி மற்றும் டோனெட்ஸ்க் ஆற்று படுகையில் உள்ள செவர்ஸ்கி ஆகிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த போது கடுமையான சேதம் ஏற்ப்பட்டதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் முயற்சியால் ஐந்து கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், பொதுமக்களில் பலர் காயமடைந்து உள்ளதாகவும் லூஹான்ஸ்க் பகுதியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.