உக்ரைன் விவகாரம்; ரஷ்யா அமெரிக்க உறவுகளின் சமநிலையை பேணுவதில் இந்தியாவுக்கு சிக்கல் ??

  • Tamil Defense
  • February 2, 2022
  • Comments Off on உக்ரைன் விவகாரம்; ரஷ்யா அமெரிக்க உறவுகளின் சமநிலையை பேணுவதில் இந்தியாவுக்கு சிக்கல் ??

ஏற்கனவே க்ரைமியா விவகாரத்திற்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் குறிப்பாக எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை ஏற்படுத்தி உள்ளது இந்தியா தொடர்ந்து நடுநிலையான போக்கை கடைபிடித்து வருகிறது.

இரண்டு நாடுகளும் அமைதியான முறையில் பேசி பிரச்சினைகளை தீர்த்து கொள்ள இந்தியா கோரிக்கை விடுத்தள்ளது, இதில் மற்றொரு சிக்கலான விஷயம் உக்ரைனும் இந்தியாவுக்கு நட்பு நாடு தான்.

இந்திய போர் கப்பல்களுக்கான என்ஜின்கள் உக்ரைனிடம் இருந்தே வாங்கப்படுகிறது, அதே போல ரஷ்யாவிடம் இருந்தும் ஆயுதம் வாங்குகிறோம் ஆகவே இரண்டு நாடுகளையும் இந்தியா பகைத்து கொள்ளாது.

அதுவே ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அது பிடிக்காது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

அதை போல இந்தியா அமெரிக்காவிடம் இருந்தும் பல மிகவும் முக்கியமான ஆயுத அமைப்புகளை வாங்கியுள்ளது, வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது என்பதும் எதிர்கால ஒப்பந்தங்களின் நலன் பாதிக்கபடலாம் எனும் கோணமும் இதில் அடங்கியுள்ளது.

இது தவிர உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டால் உலக நாடுகளின் கவனம் அந்த பகுதியை நோக்கி நகரும் நேரத்தை பயன்படுத்தி சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் செயல்களிலும் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆக இந்த நிலையில் இந்தியா அமெரிக்கா ரஷ்யா என இரண்டு நாடுகளுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது, மேலும் ரஷ்யாவிடம் அமைதியை கடைபிடிக்க தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை வலியுறுத்தி வருகிறது.