காஷ்மீரில் UAE முதலீடு பெருத்த பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான் !!

ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் தனது முதலீட்டை துவங்கிய நிலையில் இது காஷ்மீர் மீது கண்ணாக இருக்கும் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில், பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் UAE இந்தியாவின் நட்பு நாடாகும்.

ஜம்மு காஷ்மீரில் லூலூ குழுமம் தனது உணவு பதப்படுத்தல் மற்றும் சரக்கு கையாளும் மையம் ஒன்றை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதை போல புர்ஜ் காலிஃபா மற்றும் உலகின் மிகப்பெரிய மாலான துபாய் மாலை கட்டிய துபாய் மன்னருக்கு சொந்தமான எமார் குழுமம் ஜம்மு காஷ்மீரில் ஒரு மிகப்பெரிய மால் ஒன்றையும் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.