சீனாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்கும் ஒரே அமெரிக்க ஆயுதம் !!

  • Tamil Defense
  • February 7, 2022
  • Comments Off on சீனாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்கும் ஒரே அமெரிக்க ஆயுதம் !!

சமீபத்தில் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முகமையின் தலைவரான அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜாண் ஹில் ஒரு பரப்பரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது அதிகமாக மேனுவர் செய்யும் திளன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த கூடிய அல்லது சுட்டு வீழ்த்த கூடிய திறன் கொண்ட ஒரே ஆயுதம் அமெரிக்காவின் SM-6 ஏவுகணை என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட அதிகமாக மேனுவர் செய்யும் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்கும் திறன் கொண்ட SM-6 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஒன்று சோதனை செய்யப்படலாம் என கூறப்பட்டது.

வைஸ் அட்மிரல் ஜாண் ஹில் இந்த தகவலை அமெரிக்க கடற்படை பொறியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய சண்டை அமைப்புகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் SM-6 ஏவுகணை ஒன்று தான் அமெரிக்காவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை தடுப்பு ஆயுதமாகும் என கூறினார் ஆனால் அதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.