சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கும் தேஜாஸ் !!

  • Tamil Defense
  • February 8, 2022
  • Comments Off on சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கும் தேஜாஸ் !!

வருகிற 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சிங்கப்பூரின் சாங்கியில் நடைபெற உள்ள விமான கண்காட்சியில் நமது நாட்டின் தேஜாஸ் பங்கு பெற உள்ளது.

இந்த கண்காட்சியில் தேஜாஸ் வானில் பறந்து சாகசங்கள் புரிந்து தனது திறன்களை வெளி உலகிற்கு காட்சிபடுத்த உள்ளதாக மூத்த விமானப்படை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்காட்சியில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-16 மற்றும் எஃப்-35 ரக போர் விமானங்களும் பங்கேற்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் இந்தியா தனது சொந்த தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானத்தை பல்வேறு விமான கண்காட்சிகளில் ஏற்றுமதி வாய்ப்புகளுக்காக காட்சிபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.