உலகின் முதல் இலகுரக மின்னனு போர்விமானமாகும் தேஜாஸ் !!

  • Tamil Defense
  • February 11, 2022
  • Comments Off on உலகின் முதல் இலகுரக மின்னனு போர்விமானமாகும் தேஜாஸ் !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக போர் விமானமான தேஜாஸில் விரைவில் ஒரு மின்னனு போர் விமான ரகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதற்கு தேஜாஸ் EW (Electronic Warfare) Aircraft என பெயரிடப்பட்டுள்ளது, இதன்மூலம் உலகிலேயே முதலாவது இலகுரக மின்னனு போர் விமானம் என்ற சிறப்பை இது பெறும் என்றால் மிகையல்ல.

இதற்கு காரணம் ஏற்கனவே உலகில் உள்ள இலகுரக போர் விமானங்களான சுவீடன் GRIPEN-C, இத்தாலிய M-346, ரஷ்ய யாக்-130, தென் கொரிய FA-50, பிரிட்டிஷ் HAWK-200, சீன JF-17/10 ஆகிய எதிலுமே மின்னனு போர்முறை விமான ரகம் இல்லை என்பதாகும்.

இதனால் இந்தியா உட்பட மின்னனு போர் முறை விமானங்கள் வாங்க முடியாத உலகில் மிக சொற்ப பட்ஜெட் கொண்ட பல நாடுகளால் இத்தகைய போர் விமானங்களை வாங்க முடியும் இதனால் நமக்கும் வருமானம் வரும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

மின்னனு போர்முறை விமானங்கள் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொதுவாக எதிரி நாடுகளின் தகவல் தொடர்பை முடக்குவது, ரேடார்களை முடக்குவது போன்ற பணிகளை சீரும் சிறப்புமாக செய்ய வல்லவை ஆகும்.

தற்போது இந்த பணியில் HAL, ADA மற்றும் DRDO ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன, இதற்காக தேஜாஸில் உத்தம் AESA ரேடார், மூன்று ASPJ MK2, GaN UEWS மற்றும் 2 ரூத்ரம் ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த வகை தேஜாஸ் விமானங்களால் சுகோய்-30 போன்ற பெரிய விமானங்களை எஸ்-400 போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடாரில் இருந்து பாதுகாக்க முடியாது ஆனால் தேஜாஸ் மார்க் 1ஏ மிராஜ் 2000, ரஃபேல் போன்ற விமானங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பது கூடுதல் தகவலாகும்.