சவுதி ராணுவ கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய தயாரிப்பு கவச வாகனம் !!

  • Tamil Defense
  • February 25, 2022
  • Comments Off on சவுதி ராணுவ கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய தயாரிப்பு கவச வாகனம் !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இணைந்து தயாரித்துள்ள சுதேசி கவச வாகனம் WhAP ஆகும்.

இந்த வாகனத்தை ஆம்புலன்ஸ், கவச வாகனம், இலகுரக டாங்கி, மோர்ட்டார் தாக்குதல் வாகனம்,கட்டளை வாகனம், காலாட்படை சண்டை வாகனம் என பல்வேறு வகையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.

சவுதி அரேபியாவில் வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலக பாதுகாப்பு கண்காட்சியில் இந்த WhAP கவச வாகனம் காட்சிபடுத்தப்பட உள்ளது.

இதனுடன் இந்திய தயாரிப்பு Micro Bullet Proof Vehicleம் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளது இது ஏற்கனவே பாரா சிறப்பு படை, மார்க்கோஸ், தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றால் பயன்படுத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.