சிங்கப்பூரில் பலரை ஈர்த்த இந்தியாவின் தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன் !!

  • Tamil Defense
  • February 18, 2022
  • Comments Off on சிங்கப்பூரில் பலரை ஈர்த்த இந்தியாவின் தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன் !!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜாஸ் தனது அசத்தல் வித்தைகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் துபாயில் பங்கு பெற்ற கையோடு தற்போது தென் கிழக்கு ஆசியாவில் தேஜாஸை பிரபலப்படுத்தும் நோக்கிலேயே சிங்கப்பூர் கண்காட்சியில் தனது திறன்களை காட்டி உள்ளது.

மலேசிய விமானப்படைக்கான 18 இலகுரக போர் விமான ஒப்பந்தத்திற்கான போட்டியில் இந்தியாவின் தேஜாஸ் மிகவும் வலுவான நிலையில் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதை போல இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனமானது தனது புத்தம் புதிய SKYLARK-3 எனப்படும் ஒரு சிறிய மூலோபாய இரட்டை என்ஜின் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டிலும் இயங்கும் இது விரைவாக களத்தில் பயன்படுத்தும் வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது மேலும் எரிபொருளை பயன்படுத்தி புறப்பட்டு வானில் சென்றதும் சத்தமில்லாத மின்சார என்ஜினை பயன்படுத்தி பறக்கும்.

இதன் காரணமாக எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இந்த ஆளில்லா விமானத்தால் சுமார் 18 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்க முடியும் என்பதும் பல்வேறு வகையான சுமைகளை சுமக்க முடியும் மேலும் தரை இறங்க புறப்பட எந்த வசதியும் தேவை இல்லை என்பதும் இதன் சிறப்புகள் ஆகும்.