முதல்முறையாக இந்தியாவுக்கு வந்த சவுதி அரேபிய ராணுவ தளபதி !!

  • Tamil Defense
  • February 17, 2022
  • Comments Off on முதல்முறையாக இந்தியாவுக்கு வந்த சவுதி அரேபிய ராணுவ தளபதி !!

சவுதி அரேபியா நாட்டின் தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபாஹத் பின் அப்துல்லா மொஹம்மது அல் முத்தாய்ர் இந்தியாவுக்கு சுற்று பயணமாக வந்துள்ளார்.

சவுதி அரேபிய தரைப்படையின் தளபதி ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வருவது இதுவே முதல்முறையாகும் அது போல இந்திய தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே வளைகுடா கடந்த ஆண்டு சவுதி சுற்றுபயணம் சென்றார்.

இதுவும் கூட இந்திய தளபதி ஒருவர் வளைகுடா பிரதேச நாடு ஒன்றிற்கு முதல்முறையாக பயணம் சென்ற நிகழ்வாகும் ஆகவே இவை அனைத்தும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியா இடையே அதிகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி இரண்டு அதிகாரிகளும் விவாதித்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.