கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு தற்போது வரை 439 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 109 பாதுகாப்பு படையினரும் வீரமரணம் அடைந்துள்ளனர் இவர்களுடன் 98 அப்பாவி பொதுமக்களும் மரணத்தை தழுவி உள்ளனர், 5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.