அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு 7 வீரர்கள் மாயம் !!

  • Tamil Defense
  • February 8, 2022
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு 7 வீரர்கள் மாயம் !!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையோரம் உள்ள காமெங் செக்டாரில் இந்திய தரைப்படை வீரர்கள் குழு ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.

அப்போது கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு தரைப்படை வீரர்கள் மாயமாகி உள்ளனர், இவர்கள் பல அடி ஆழத்தில் புதைந்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து இந்திய தரைப்படை தனது வீரர்கள் மற்றும் பல்வேறு வகையான தேடுதல் கருவிகளை அந்த பகுதியில் களமிறக்கி வீரர்களை தேடி வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.