ரேடாரில் இருந்து மாயமான ஜப்பானிய போர் விமானம் தேடும் பணிகள் துவக்கம் !!

  • Tamil Defense
  • February 2, 2022
  • Comments Off on ரேடாரில் இருந்து மாயமான ஜப்பானிய போர் விமானம் தேடும் பணிகள் துவக்கம் !!

ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன எஃப்-15 ரக போர் விமானம் ஒன்று திங்கட்கிழமை அன்று புறப்பட்ட சில மணித்துளிகளில் மாயமானது.

மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சூ விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அந்த விமானம் ஐந்து கிலோமீட்டர் தொலைவு சென்றதும் ரேடாரில் இருந்து மாயமானது.

இதை தொடர்ந்து ஜப்பான் கடல் பகுதியில் போர் விமானத்தை தேடும் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.