ரஷ்யா இந்தியாவின் கடற்படைக்கு சுமார் 43,000 கோடி மதிப்பிலான 6 நீர்மூழ்கிகள் கப்பல்களை வாங்குவதற்கான திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இதுபற்றிய தகவலை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட ப்ராஜெக்ட்75-ஐ திட்டத்தில் இருந்து சில நிபந்தனைகளால் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டிய போது முதலில் அமூர்-1650 ரக நீர்மூழ்கியை அளிக்க முன்வந்தது பின்னர் தனது மேம்படுத்தப்பட்ட கீலோ ரக நீர்மூழ்கியையும் தர முன்வந்தது.
இதேபோல ஜெர்மனியும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில நிபந்தனைகள் கவலையளிப்பதாகவும் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டால் தொடர்ந்து பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவும் இந்த ஒப்பந்தத்தில் மேற்குறிப்பிட்ட அதே காரணங்களை சுட்டி காட்டி தனது கவலையை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
ஆனால் நம்பத்தகுந்த பாதுகாப்பு துறை வட்டாரங்கள்இந்திய கடற்படை ஃபிரெஞ்சு நீர்மூழ்கிகளை பெறுவதற்காக நிபந்தனைகளை கடுமையாக்கி உள்ளதாகவும்,
ஃபிரான்ஸ் நீர்மூழ்கிகளை வாங்கினால் எதிர்காலத்தில் ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு அதிவேக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பலின் தொழில்நுட்பத்தை தரும் வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.