உக்ரைன் எல்லையோரம் படைகளை குறைக்கும் ரஷ்யா !!

ரஷ்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் படையெடுப்பு நடக்கலாம் என வெளியான தகவலை பொய்யாக்க உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை குறைக்க துவங்கி உள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன் எல்லையில் போர் பயிற்சி தொடர்ந்து நடைபெறும் எனவும் ஒரு சில படையணிகள் மட்டும் பின் விலக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையோரம் படைகளை குவிக்க துவங்கிய ரஷ்யா தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையோரம் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.