1 min read
கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புடினுக்கு ரஷ்ய பாராளுமன்றம் அனுமதி !!
ரஷ்ய பாராளுமன்றத்தின் மேல் சபை நேற்று ரஷ்ய அதிபருக்கு கிழக்கு உக்ரைனில் படைகளை குவிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து அமைதிகாக்கும் பணிகளுக்காக டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்கு ரஷ்ய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடைய கோரிக்கையை ஏற்று மேல்சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.