ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு குறித்து விவாதிக்க அமெரிக்கா தலைமையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு சீனா எதிராக வாக்களித்த நிலையில் இந்தியா கென்யா மற்றும் கேபோன் ஆகிய நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதை தொடர்ந்து ஐநாவுக்கான ரஷ்ய தூதர் டிமித்ரி பொல்யான்ஸ்கி இந்தியா சீனா கென்யா மற்றும் கேபோன் ஆகிய நாடுகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.