அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய ரஷ்யா !!

  • Tamil Defense
  • February 7, 2022
  • Comments Off on அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய ரஷ்யா !!

ரஷ்யா சமீபத்தில் ஒரு ஜோடி தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு போர் விமானங்களை நேட்டோ நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மிக நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் நாட்டின் வான் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு Tu22M3 ரக சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களும் பெலாரஸ் நாட்டின் விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு படைகளுடன் ஒருங்கிணைந்து பயிற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ரஷ்யா சைபீரியாவில் இருந்து ஏராளமான தரைப்படை படையணிகளை பெலாரஸ் நாட்டிற்கு நகர்த்தி கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இது இந்த விவகாரத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.