1 min read
ஊடுருவ முயன்ற 5 உக்ரைனியர்களை கொன்றதாக ரஷ்யா அறிக்கை !!
ரஷ்யா எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்த முயன்ற ஐந்து உக்ரைனிய வீரர்களை கொன்றதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவின் ஃபெடரல் சர்வீஸ் பியூரோவுக்கு சொந்தமான காவல் சாவடி ஒன்றையும் உக்ரைன் குண்டுவீசி அழித்தாக குற்றம்சாட்டி உள்ளது.
ஆனால் இதனை எல்லாம் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமித்ரி குலேபா மறுத்துள்ளார் ரஷ்யா பொய்யான தகவல்களை பரப்புவதாகவும்
உக்ரைன் ரஷ்யாவின் கூற்றுப்படி எந்த படைகளையும், கவச வாகனங்களையும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த அனுப்பவில்லை மேலும் குண்டுகளை வீசவும் இல்லை என தெரிவித்துள்ளார்.