ரஷ்யா உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்தலாம் வெள்ளை மாளிகை !!

  • Tamil Defense
  • February 12, 2022
  • Comments Off on ரஷ்யா உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்தலாம் வெள்ளை மாளிகை !!

வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவன் அளித்த பேட்டியில் ரஷ்யா படையெடுப்பின் ஆரம்பத்தில் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்தலாம் என கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் சாத்தியக்கூறுகள் ரஷ்ய படைகள் எல்லையோரம் உள்ள முன்னனி பகுதிகளுக்கு நகர்வதால் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

இதனை தொடர்ந்து தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, லாத்வியா இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் மக்களை திரும்பி வருமாறு கோரிக்கை விடுத்துள்ளன.