உக்ரேனின் செர்னோபில் அணுநிலையத்தை கைப்பற்றிய இரஷ்ய படைகள்

  • Tamil Defense
  • February 25, 2022
  • Comments Off on உக்ரேனின் செர்னோபில் அணுநிலையத்தை கைப்பற்றிய இரஷ்ய படைகள்

உக்ரேனில் உள்ள செர்னோபில் அணுநிலையத்தை இரஷ்யப்படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பிறகும் செர்னோபில் அணு நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது.

நேட்டோ இரஷ்ய பாதையில் குறுக்கிட கூடாது என்பதற்காக தான் இரஷ்யா செர்னோபில் பகுதியை கைப்பற்றியுள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது.

செர்னோபில் அணுஉலை விபத்திற்கு பிறகு மூடப்பட்ட பிறகு சில காலம் வரை சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருந்தது.இரஷ்ய படையெடுப்பிற்கு சில வாரங்களுக்கு முன் தான் இந்த பகுதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் என உக்ரேன் கூறியுள்ளது.