கேரளாவில் மீட்கப்பட்ட இளைஞர் ராணுவத்தில் சேர விருப்பம் !!

  • Tamil Defense
  • February 10, 2022
  • Comments Off on கேரளாவில் மீட்கப்பட்ட இளைஞர் ராணுவத்தில் சேர விருப்பம் !!

நேற்று கேரளாவில் மலம்புழா அணையை ஒட்டிய குரும்பாச்சி மலை பகுதியில் பாபு என்ற இளைஞர் ட்ரெக்கிங் சென்ற போது பாறை பிளவில் சிக்கி கொண்டார்.

சுமார் 45 மணி நேரமாக உணவு மற்றும் குடி தண்ணீர் இன்றி தவித்த அவரை லெஃப்டினன்ட் கர்னல் ஹேமந்த் ராஜ் தலைமையிலான ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் தன்னை மீட்ட ராணுவ வீரர்களால் உந்துதல் பெற்று தானும் ராணுவத்தில் இணைய விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த ஆபரேஷனை முன்னின்று நடத்திய லெஃப்டினன்ட் கர்னல் ஹேமந்த் ராஜ் கேரளா வெள்ள மீட்பு பணிகள் மற்றும் ஜெனரல் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து மீட்பிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.