கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை விரைவில் பார்வையிட உள்ள ஜனாதிபதி !!

  • Tamil Defense
  • February 13, 2022
  • Comments Off on கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை விரைவில் பார்வையிட உள்ள ஜனாதிபதி !!

ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் விரைவில் விசாகப்பட்டினம் நகரில் இந்திய கடற்படை போர்கப்பல்களுடைய அணிவகுப்பை பார்வையிட உள்ளார்.

ஃபெப்ரவரி 21 அன்று நடைபெற உள்ள இந்த நிகழ்வில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 60 கப்பல்கள் மற்றும் 50 வானூர்திகள் பங்கேற்க உள்ளன.

நாட்டின் ராணுவத்தின் தலைமை தளபதி ஜனாதிபதி என அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

60 கப்பல்களும் நான்கு வரிசைகளாக அணிவகுத்து நிற்க ஜனாதிபதியின் கப்பல் அவற்றின் அருகே செல்ல வீரர்கள் மற்றும் மேலே பறக்கும் வானூர்திகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொள்வார்.