பாகிஸ்தானுக்கான சீனாவின் முதல் ஜே-10 விமானத்தின் படங்கள் வெளியானது !!
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான முதலாவது சீன தயாரிப்பு ஜே-10 பலதிறன் போர் விமானத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த வகை விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்தால் இந்தியா உடனான எல்லையோரம் நிறுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதே உண்மையாகும்.
இந்த ஒற்றை என்ஜின் நடுத்தர போர் விமானத்தில் சீன தயாரிப்பு WS-10B TAIHANG ரக என்ஜின் பயன்படுத்துகிறது என்பதும் இந்த ஒப்பந்தம் மூலமாக இரண்டு நாடுகள் இடையேயான நெருக்கம் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட விமானத்தின் புகைப்படங்கள் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் அமைந்துள்ள செங்டு விமான காரப்பரேஷன் நிறுனத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தி வரும் JF-17 ரக போர் விமானத்தை விடவும் இந்த J-10 போர் விமானம் நவீனமானதாகும், புதிய ஏவியானிக்ஸ் அதிக சுமை திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.