ராஜஸ்தான் காவல்துறையின் குற்ற புலனாய்வு துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளியை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ரைசிங்நகர் பகுதியை சேர்ந்த ஷக்திபால் சவுக் என்பவன் கங்காநகர் பகுதியில் ராணுவ வீரனாக நடித்து பல்வேறு உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இவனிடம் கைபற்றப்பட்ட மொபை ஃபோனில் பல்வேறு ராணுவ வாகனங்கள், படைப்பரிவுகள் மற்றும் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவனை ராஜஸ்தான் காவல்துறையின் உளவுத்துறை இயக்குநர் ஜெனரல் அளித்த தகவலின் பேரில் குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
இவனிடம் நடத்திய விசாரணையில் எல்லைக்கு அப்பால் உள்ள ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் தொடர்பில் இருப்பதும் தகவல்கள் பரிமாறியதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.