பஞ்சாப் மாநில காவல்துறையினர் கரிண்டா காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட மஹாவல் கிராமத்தை சேர்ந்த இருவர் மீது வழங்கு பதிந்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஒருவர் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்ராஜ் என்பதும் வழக்கு பதியப்பட்ட மற்றொருவர் பூனேவில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ரஷ்பால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருவரும் சமுக வலைதளங்களை பயன்படுத்தி மிகவும் முக்கியமான தகவல்கள் வரைபடங்கள் ராணுவ பிரிவுகளின் இருப்பிடங்களை பற்றிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் திட்டமிட்டு வைத்து பொறியில் பல்ராஜ் சிக்கியுள்ளான் ஆனால் ரஷ்பால் தப்பியுள்ளான் அவனை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன, இவர்களுக்கு போதை பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.