முக்கிய ஆவணங்களை பாக் பயங்கரவாதிகளுக்கு கசிய விட்ட அதிகாரி கைது !!

  • Tamil Defense
  • February 20, 2022
  • Comments Off on முக்கிய ஆவணங்களை பாக் பயங்கரவாதிகளுக்கு கசிய விட்ட அதிகாரி கைது !!

இந்திய காவல் பணி அதிகாரியும் தேசிய விசாரணை முகமையில் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலும் பணியாற்றி வந்த அர்விந்த் திக்விஜய் நெகி எனும் அதிகாரியை தேசிய விசாரணை முகமை கைது செய்துள்ளது.

இந்தியாவில் மும்பை தாக்குதல், பாராளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்வங்களை புரிந்த பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு,

அர்விந்த் திக்விஜய் நெகி மிக மிக முக்கியமான ரகசிய ஆவணங்களை ஒரு பயங்கரவாத உதவியாளர் வழியாக கசிய விட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானதை அடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கசியவிடப்பட்ட ஆவணங்களில் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாத உதவியாளர்கள் பற்றிய விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.