சீக்கிய வீரர்களுக்கு சிறப்பு ஹெல்மெட் தயாரிப்பு !!

  • Tamil Defense
  • February 17, 2022
  • Comments Off on சீக்கிய வீரர்களுக்கு சிறப்பு ஹெல்மெட் தயாரிப்பு !!

இந்திய தரைப்படையின் சீக்கிய வீரர்களுக்கென பிரத்தியேகமாக வீர் எனப்படும் தலைகவசம் கான்பூரில் இயங்கி வரும் MKU மற்றும் Global Defense ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய வீரர்களின் தலைமுடி கொண்டை பகுதிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இதனை எவ்வித சிரமமும் இல்லாமல் அணிந்து கொண்டு போர் உட்பட அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹெல்மெட்டில் மற்ற ஹெல்மெட்டுகளை போல் இரவில் பார்க்கும் கருவிகளை போல பல்வேறு வகையான கருவிகளை இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் மேலும் தோட்டாக்கள் மற்றும் சிதிலங்களை 3A அளவிற்கு தடுக்கும்,

இது தவிர இலகுவாகவும், கிருமி தொற்றை தடுக்கும் வகையிலும், நெருப்பு, வேதி பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான கால சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.